இந்தியா எடுத்த ஒரு முடிவால்.. நஷ்டப்பட்டு தடுமாறும் பாகிஸ்தான்.. வீரர்களுக்கு ஊதியம், ஹோட்டல் கட்?
இஸ்லாமாபாத்: சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தியதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தற்போது கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த தொடரை நடத்தியதில் அவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஊடக செய்திகளின்படி, சாம்பியன்ஸ் கோப்பையை நடத்தியதன் மூலம் பிசிபிக்கு 85 மில்லியன் டாலர்கள் (£68 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தது. பாகிஸ்தான் இந்த தொடரின் ஹோஸ்ட் ஆக இருந்தும், இறுதிப் போட்டி அவர்களின் நாட்டில் நடைபெறவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப மறுத்ததே இதற்கு காரணம். இதன் விளைவாக, இந்தியா தனது அனைத்து போட்டிகளையும், இறுதிப் போட்டி உட்பட, ஹைப்ரிட் மாடல் அடிப்படையில் துபாயில் விளையாடியது.

பாகிஸ்தான் வாரியத்திற்கு பெரும் பின்னடைவு
டெலிகிராப் ஊடகத்தின் செய்திப்படி, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்துவதற்காக சுமார் 18 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த தொகை ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று மைதானங்களை புதுப்பிப்பதில் செலவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 40 மில்லியன் டாலர்களை போட்டிக்கான ஏற்பாடுகளுக்காக செலவிட்டது. ஆனால் இந்த தொடரில் இருந்து அவர்களுக்கு வருமானம் மிகக் குறைவாகவே கிடைத்தது.
சாம்பியன்ஸ் கோப்பை மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நீங்கள் இப்போது யூகித்துக்கொள்ளலாம்.
வீரர்களின் ஊதியத்தில் குறைப்பு
தற்போது இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பிசிபி தனது வீரர்களின் போட்டி ஊதியத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஊதியத்தை பிசிபி 90 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதேபோல், ரிசர்வ் வீரர்களின் ஊதியம் 87.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தி டான் என்ற பாகிஸ்தான் ஊடகத்தின் செய்தியறிக்கையின்படி, பிசிபி போட்டி ஊதியத்தை 40,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக குறைத்துள்ளது.
இருப்பினும், பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த முடிவை ஏற்க மறுத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்குமாறு வாரியத்தின் உள்நாட்டு கிரிக்கெட் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் வீரர்கள் மற்றொரு கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள். ஆம்.. பாகிஸ்தான் வீரர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கு பதிலாக அதற்கும் குறைவான ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதே நேரத்தில், பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் ஏமாற்றம் அளித்தது.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியது. லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது. அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில், இந்தியா தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சும், பேட்டிங்கும் தொடர் முழுவதும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, சில வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.












Click it and Unblock the Notifications