Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் போல இல்லை! சென்னை மலைப்பா இருக்கு! இந்த அன்பு நெகிழ வைக்கிறது.. பாகிஸ்தான் ரசிகர்கள் வியப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்து வந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் ஆதரவு தென்னிந்தியாவை நேசிக்க வைக்கிறது., என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாராட்டி மகிழ்ந்து உள்ளார்.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மேட்ச் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வந்த போது சென்னை ரசிகர்கள் அதை தீவிரமாக கொண்டாடினார்கள். முக்கியமாக பாபர் ஆஸம் ஆட வந்த போது சென்னை ரசிகர்கள் பாபர் பாபர் என்று கூறி அவரை வரவேற்று கொண்டாடினார்கள். அதோடு நிற்காமல் சென்னை ரசிகர்கள் பலர் பச்சை நிறத்தில் பாகிஸ்தான் உடை அணிந்து வந்து கூட பாகிஸ்தான் அணியை கொண்டாடினார்கள்.

Pakistan fans are happy after Chennai fans celebrate Pakistan players World Cup 2023?

சென்னையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை ரசிகர்கள் கொண்டாடியதை வடஇந்திய நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சென்னை ரசிகர்கள் வேண்டுமென்றே வடஇந்தியர்கள் மனதை புண்படுத்துவதாக வடஇந்திய ரசிகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். சென்னை ரசிகர்களின் செயல் சரியில்லை என்று விமர்சனம் வைத்துள்ளனர்.

என்ன நடந்தது?: இது தொடர்பாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பேசுகையில், ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் அகமதாபாத் மைதானத்தில் 4 பாகிஸ்தான் ஜெர்ஸிகள் மட்டுமே பார்க்க முடிந்தது. அங்கே பாகிஸ்தான் ரசிகர்களே இல்லை. எங்களுக்கு அங்கே ஆதரவு இல்லாமல் பிசிசிஐ நடத்தும் ஆட்டம் போன்ற சூழ்நிலை நிலவியது.

( பாபர்.. பாபர்.. சென்னையில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்.. கொதித்து போன வடஇந்திய நெட்டிசன்கள்!)

ஐசிசி ஆட்டம் போலவே நிலைமை இல்லை. ஆனால் சென்னையில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இங்கே எங்களுக்கு பெரிய ஆதரவு இருக்கிறது . சென்னையில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்து வந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் ஆதரவு தென்னிந்தியாவை நேசிக்க வைக்கிறது., என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாராட்டி மகிழ்ந்து உள்ளார்.

Pakistan fans are happy after Chennai fans celebrate Pakistan players World Cup 2023?

நெகிழ்ச்சி: இன்னொரு பக்கம் சென்னையை சேர்ந்த ரசிகர் ஒருவர் பேசுகையில்.. அகமதாபாத்தில் நடந்த சம்பவம் அருவருப்பை அளிக்க கூடியது. அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்திருக்க கூடாது. இந்தியாவா பாகிஸ்தானா என்றால் இந்தியாவைத்தான் ஆதரிக்க வேண்டும். அதற்காக பாகிஸ்தானை இப்படி அவமதிக்க கூடாது. அவர்கள் நம் நாட்டிற்கு வந்த விருந்தாளிகள். அவர்களை நாம் சரியாக நடத்த வேண்டும்.

நம்முடைய நாட்டிற்கு வந்த மக்களை இப்படி வேண்டும் என்று அவமதித்து கிண்டல் செய்ய கூடாது. அது மோசமான குணம். நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நாம் இப்படி நடத்த மாட்டோம் இல்லையா? அப்படித்தான் இதுவும். இன்று நாங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறோம். பாகிஸ்தான் நல்ல அணி. இது கிரிக்கெட். இதில் மதம் அரசியலை கொண்டு வரக்கூடாது, என்று அந்த ரசிகர் பேசி உள்ளார்.

Pakistan fans are happy after Chennai fans celebrate Pakistan players World Cup 2023?

என்ன நடந்தது?: கடந்த சனிக்கிழமை இந்தியா பாகிஸ்தான் மேட்சில் முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியன் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக, கிண்டல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன.

குஜராத் அகமதாபாத் மைத்ததில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை கொண்டாடி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+