பாபர்.. பாபர்.. சென்னையில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்.. கொதித்து போன வடஇந்திய நெட்டிசன்கள்!
சென்னை: சென்னையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை ரசிகர்கள் கொண்டாடியதை வடஇந்திய நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இந்தியா பாகிஸ்தான் மேட்சில் முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியன் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக, கிண்டல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன.
குஜராத் அகமதாபாத் மைத்ததில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் விதமாக, அவர்களை வெறுப்பேற்றும் விதமாக அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
( லைவ் ஒளிபரப்பில்.. கோலி ஆடும் போதே கெட்ட வார்த்தை பேசிய கிறிஸ் ஸ்ரீகாந்த்.. எப்படி அனுமதிக்கிறாங்க? )
கோரிக்கை: இதையடுத்து சென்னையில் பாகிஸ்தான் வீரர்களை சரியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பாகிஸ்தானின் இன்றைய போட்டி உட்பட இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களை சிறப்பாக உபசரிக்க வேண்டும், அவர்களை ரசிகர்கள் சரியாக நடத்த வேண்டும். சென்னை மக்கள் எவ்வளவு விருந்தோம்பல் கொண்டவர்கள், தன்மையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
கொண்டாட்டம்: அதன்படியே இன்று பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வந்த போது சென்னை ரசிகர்கள் அதை தீவிரமாக கொண்டாடினார்கள். முக்கியமாக பாபர் ஆஸம் ஆட வந்த போது சென்னை ரசிகர்கள் பாபர் பாபர் என்று கூறி அவரை வரவேற்று கொண்டாடினார்கள். அதோடு நிற்காமல் சென்னை ரசிகர்கள் பலர் பச்சை நிறத்தில் பாகிஸ்தான் உடை அணிந்து வந்து கூட பாகிஸ்தான் அணியை கொண்டாடினார்கள்.

சென்னையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை ரசிகர்கள் கொண்டாடியதை வடஇந்திய நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சென்னை ரசிகர்கள் வேண்டுமென்றே வடஇந்தியர்கள் மனதை புண்படுத்துவதாக வடஇந்திய ரசிகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். சென்னை ரசிகர்களின் செயல் சரியில்லை என்று விமர்சனம் வைத்துள்ளனர்.

சென்னை வரலாறு: சென்னை மக்கள்.. சென்னை ரசிகர்கள் பொதுவாகவே நல்ல கிரிக்கெட் அறிவு கொண்டவர்கள். மதம், அரசியல் பார்க்காமல் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்க கூடியவர்கள்., 1997ல் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக 194 அடித்தார். அப்போது சென்னை ரசிகர்கள் அவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள்.
அந்த அளவிற்கு தமிழ்நாடு ரசிகர்கள் தன்மையானவர்கள். இந்த நிலையில்தான் இன்று நடக்கும் போட்டியிலும் சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக நடத்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications