Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லைவ் ஒளிபரப்பில்.. கோலி ஆடும் போதே கெட்ட வார்த்தை பேசிய கிறிஸ் ஸ்ரீகாந்த்.. எப்படி அனுமதிக்கிறாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இந்தியா நியூசிலாந்து இடையிலான மேட்சில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் ஸ்ரீகாந்த் கெட்டவார்த்தை பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் கமெண்ட்ரி என்பது ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும். அப்போது கமென்டரி என்பதில் உட்சபட்ச அழகு, தரம் இருக்கும். இப்போதும் கூட 2011 உலகக் கோப்பை பைனலில் தோனி சிக்ஸ் அடித்த போது ரவி சாஸ்திரி சொன்ன கடைசி கமென்டரியை மறக்க முடியாது.

அந்த காட்சியை யோசிப்பவர்களுக்கு அந்த சிக்ஸ்.. தோனி முகத்தோடு சேர்த்து.. Dhoni finishes off in style! India lift the world cup after 28 years என்று சாஸ்திரி சொன்னதும் அவரின் குரலிலேயே கேட்கும். அந்த அளவிற்கு வலிமை வாய்ந்தது கமென்டரி. கமென்டரி சொல்வது என்பது.. வெறும் மேட்ச் பற்றி சொல்லாமல் அதில் இருக்கும் உணர்வுகளை கடத்தும் வித்தை.

Kris Srikanth said a bad word in commentary during the India vs New Zealand match in World Cup 2023

விமர்சனங்கள்: ஆனால் தற்போது தமிழ் கமென்டரி என்ற பெயரில்.. நடக்கும் விஷயங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் பற்றி பேசாமல் பெரும்பாலான நேரங்கள் உணவு பற்றி, சினிமா பற்றி எல்லாம் பேசுகிறார்கள். தொடர்பே இல்லாத விஷயங்களை பற்றி பேசி.. காமெடி செய்கிறார்கள்.

ஆனால் கிரிக்கெட் பற்றி ஆக்கபூர்வமாக பேசுவது இல்லை. ரைமிங் என்ற பெயரில் பழைய கால காமெடிகளை செய்கின்றனர். கிரிக்கெட் பற்றி பெரிதாக கருத்துக்களையே சொல்வது இல்லை என்று விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முக்கியமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் ஸ்ரீகாந்த் வீரர் களை அவமதிக்கிறார் என்ற புகார் உள்ளது.

( 5 மேட்ச் ஜெயிச்சாலும்..இந்திய அணியின் பெரிய வீக்னஸ் கசிஞ்சிடுச்சே! ஆபத்து.. எச்சரித்த எக்ஸ்பர்ட்)

விமர்சனம்: அவர் வீரர்களை மோசமான வார்த்தையில் பேசுகிறார். வாடா போடா என்கிறார். அவன்.. இவன் என்கிறார். மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார் என்று புகார் உள்ளது. இதெல்லாம் போக .. இந்திய அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் ஸ்ரீகாந்த் நேற்று நடந்த மேட்சில் கோலி பேட்டிங் செய்யும் போது கெட்ட வார்த்தை பேசினார்.

சினிமாவில் சகஜமாக புழங்கும் ஒரு கெட்ட வார்த்தையை அவர் லைவ் ஒளிபரப்பில் பேசினார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கோலி பற்றி பாராட்டும் போது அவர் இந்த வார்த்தையை கூறினார். இதை எல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

2023 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வென்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி அசாத்திய பேட்டிங்.. பவுலிங் மூலம் வென்றது. கோலியின் அல்மோஸ்ட் சதம். சமியின் 5 விக்கெட்டுகள்.. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி வியூகம் என்று இந்திய அணி ஆல் ரவுண்டர் பார்பார்மன்ஸ் மூலம் எளிதாக நேற்று வென்றது.

Kris Srikanth said a bad word in commentary during the India vs New Zealand match in World Cup 2023

இந்தியா வெற்றி: நேற்று முதலில் 19 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. ஆனால் அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து கேட்சுகளை விட்டதால் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடியது. கடைசியில் நியூசிலாந்து ரன்களை கட்டுப்படுத்திய இந்திய அணி.. நியூசிலாந்து அணியை பிடித்து இழுத்து 273 ரன்களுக்கு சுருட்டியது. இதையடுத்து ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று ஆட்டத்தை தொடங்கினார். 4 சிக்ஸ் , 4 பவுண்டரி என்று அதிரடியாக தொடக்கம் கொடுத்தவர் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

கடைசியில் கோலி கடைசி வரை ஆடி 95 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவும் அதிரடியாக ஆடி 39 ரன்கள் எடுத்து.. இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+