சாம்பியன்ஸ் டிராபி பைனல்ஸை விடுங்க! ஒரு வெற்றி கூட பெறாத பாகிஸ்தானுக்கு கோடி கணக்கில் பரிசு! எப்படி
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இது ஒரு பக்கம் நடக்கப் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியால் இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் போனது அனைவருக்கும் தெரியும். ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்றாலும் கோடிக் கணக்கான ரூபாயை பாகிஸ்தான் பரிசுத் தொகையாக எடுத்துச்செல்லவுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஒடிஐ கிரிக்கெட்டில் டாப் 8 அணிகள் மட்டுமே பங்கேற்பது தான் சாம்பியின்ஸ் டிராபி. இந்தத் தொடர் இப்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி
முதலில் அனைத்து போட்டிகளும் துபாயிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதையடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, துபாயில் இந்தியா தனது போட்டிகளை விளையாடியது. இறுதிப் போட்டி நாளை துபாயில் நடைபெறும் நிலையில், இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்வியை இதில் சந்தித்தது. ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் க்ரூப் சுற்றுடன் நடையைக் கட்டியது. பாகிஸ்தான் அணி பிப்ரவரி 19ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. அதில் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணியை துபாயில் எதிர்கொண்டது. இதில் அட்டகாசமாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
கடைசி போட்டி பிப்ரவரி 27ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்தது. இருப்பினும், மழை காரணமாகப் போட்டி மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் 50 தொடரில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்றாலும் கூட பாகிஸ்தானுக்குக் கணிசமான பரிசுத் தொகை கிடைக்கத் தான் போகிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
எவ்வளவு கிடைக்கும்?
8 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் நிலையில். பரிசுத் தொகையை ஐசிசி அமைப்பு 53 சதவீதம் அதிகரித்தது. அதன்படி மொத்த மதிப்பு $6.9 மில்லியன் ஆகும். அதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $2.24 மில்லியன் பரிசுத் தொகையாகக் கிடைக்கும். தொடர்ந்து இரண்டாம் இடம் பிடிக்கும் அணி $1.12 மில்லியன் கிடைக்கும். அதேநேரம் அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் தலா 560,000 டாலர் பெறுவார்கள்.
மொத்தம் சுமார் ரூ.2 கோடி
கடைசியாக நாக் அவுட் சுற்றுடன் நடையை கட்டிய அணிகளுக்கு 140,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.2 கோடி) வழங்கப்படும். அதன்படி பாகிஸ்தானுக்கு இந்த தொகை கிடைக்கும். இது தவிர ஒரு அணி எந்த இடத்தில் முடித்தாலும் அனைவருக்கும் $125,000 (ரூ.1.08 கோடி) தரப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த தொகையும் பாகிஸ்தானுக்கு கிடைக்கும். ஆக மொத்தத்தில் பாகிஸ்தான் அணிக்கு $265,000 (ரூ.2.62 கோடி) கிடைக்கும். அதாவது ஒரு போட்டியில் கூட வெல்லாத பாகிஸ்தான் அணிக்கு 2 கோடிக்கு மேல் பரிசு தொகை கிடைக்கவுள்ளது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications