ரிஷப் பண்ட்-க்கு அடுத்த ஆப்பு.. இஷான் கிஷனால் நேர்ந்த கதி.. பின்னணியில் கம்பீர், அஜித் அகர்கர்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் பேக் அப் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் இஷான் கிஷனை கொண்டு வர தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் முடிவு செய்திருக்கிறார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்க உள்ளது. அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொட்ரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால் பிசிசிஐ தரப்பில் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில், ஒருநாள் தொடருக்கான அணி இதுவரை வெளியாகவில்லை.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது. அப்போது சுப்மன் கில் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது சுப்மன் கில் முழு ஃபிட்னஸை எட்டிவிட்ட சூழலில், அவர் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இதனால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாகவே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் கூட்டணி முடிவு எடுத்துள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பண்ட்டை இந்திய அணியில் இருந்து நீக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரிஷப் பண்ட் இடத்தில் இஷான் கிஷனை கொண்டு வர கம்பீர் முடிவு எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ஆனாலும் அவர் நீக்கப்பட இருப்பது விவாதமாகி இருக்கிறது. ஆனால் விஜய் ஹசாரே தொடரில் இஷான் கிஷன் அபாரமான ஃபார்மில் ஆடி வருகிறார்.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் இடம்பிடித்து மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார். அவரின் மன உறுதியை அதிகப்படுத்தும் வகையில் ஒருநாள் அணியிலும் சேர்க்க கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப அவரிம் அண்மையில் 35 பந்துகளில் சதம் விளாசி அசத்தி இருந்தார். இதனால் இனி ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications