33 பந்தில் 93 ரன்கள்.. மனுஷன் மாதிரியா அடிச்ச.. குஜராத் பவுலர்களை கதறவிட்ட ரஜத் பட்டிதார்!
மும்பை: குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 9 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 93 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஆர்சிபி அணியின் பேட்டிங் முடிவில் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்று நிச்சயமாக புலம்பி இருக்கிறார்.

ஏனென்றால் எந்தப் பக்கம் திரும்பினாலும் சிக்சர், பவுண்டரியும் பறந்து கொண்டே இருந்தது. ஒரு பந்துகள் பவுண்டரிக்கு செல்லவில்லை என்றால், ஃபீல்டர்களின் தவறால் எளிதாக பவுண்டரிக்கு சென்றது. 20 ஓவர்கள் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களை குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 9 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 93 ரன்களை விளாசி இருக்கிறார்.
9வது ஓவரின் போதுதான் ரஜத் பட்டிதார் களத்திற்கு வந்தார். 14 ஓவர்கள் முடிவில் 13 பந்துகளில் 21 ரன்களை சேர்த்திருந்தார். அப்போது கெஜ்ரோலியா வீசிய ஒரே ஓவரில் 2 நோ-பால், ஒரு ஒய்டு உட்பட 28 ரன்கள் குவிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஆர்சிபி அணியின் கைகள் ஓங்கியது. இதன்பின் ரஷித் கான் வீசிய அடுத்த ஓவரிலேயே பட்டிதார் 3 சிக்சர்களை விளாசினர்.
இதனால் 21 பந்துகளில் பட்டிதார் அரைசதம் கடக்க, பின் ஒவ்வொரு ஓவரில் சிக்ஸ், பவுண்டரி பறந்து கொண்டே இருந்தது. இதன் மூலமாக பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்களை விளாசிய அணி என்ற சாதனையையும் ஆர்சிபி அணி படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஜத் பட்டிதார் பிளே ஆஃப் சுற்றில் அசாத்திய ஆட்டத்தை ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுவரை பிளே ஆஃப் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் பட்டிதார் 1 சதம், 2 அரைசதம் உட்பட 338 ரன்களை குவித்துள்ளாஅர். அதுமட்டுமல்லாமல் 25 பவுண்டரி, 24 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்கள் ரஜத் பட்டிதாரை கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications