ரூ.16,300 கோடி.. ஆர்சிபி அணியை வாங்க முன் வரும் மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்.. என்ன நடந்தது?
மும்பை: ஆர்சிபி அணியை வாங்குவதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான கிளேசர் குடும்பம் முன் வந்துள்ளதாக தெரிகிறது. ஆர்சிபி அணியின் மொத்த பங்குகளையும் வாங்க ரூ.16,300 கோடி கொடுக்க கிளேசர் குடும்பம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணி முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதேபோல் ஆர்சிபி மகளிர் அணியின் 2வது முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே ஆர்சிபி அணியின் உரிமையாளர்களான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அணியை விற்ப முடிவு செய்தனர்.

சாம்பியன் பட்டத்துடன் இருக்கும் போது ஆர்சிபி அணியை விற்பனை செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும் என்று யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் கருதுகிறது. அதற்கான விலையையும் ஆர்சிபி அணி நிர்வாகம் வெளியிட்டது. ஆர்சிபி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் மதிப்பாக சுமார் 2 பில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடார் பூனவாலா, கவுதம் அதானி உள்ளிட்டோர் ஆர்சிபி அணியை வாங்குவதற்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் ஆர்சிபி அணியை வாங்க புதிய நிறுவனம் போட்டியில் குதித்துள்ளது. கால்பந்து பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான கிளேசர் குரூப் ஆர்சிபி அணியை வாங்க தயாராகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கிளேசர் தரப்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் லான்சர் கேபிட்டல் நிறுவனம் தரப்பில் ரூ.16,300 கோடி கொடுக்க முன் வந்துள்ளது. இது ஆர்சிபி அணியின் நிர்வாகிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏற்கனவே மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன், ஐஎல்டி20 லீக் தொடரின் டெசர்ட் வைப்பர்ஸ் அணியையும் கிளேசர் குடும்பம் வாங்கி வைத்திருக்கிறது.
இருந்தாலும் கிளேசர் குடும்பத்தினருக்கு ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வாங்கிவிட வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு. ஏற்கனவே குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளில் ஒன்றை வாங்க கிளேசர் குடும்பம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அப்போது இரு அணிகளுக்கும் குறைவான தொகையை மட்டுமே கொடுக்க வந்ததால், அந்த வாய்ப்பு கைகூடவில்லை. இதனால் ஆர்சிபி அணியை வாங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications