இதுதான்டா ஆர்சிபி.. படிக்கலுக்கு டாடா காட்டும் பெங்களூர் அணி.. வெங்கடேஷ் ஐயர் கொண்டு வந்த டிகே!
அபுதாபி: ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி அணிக்காக ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் வெங்கடேஷ் ஐயர். கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட போது, எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இந்த நிலையில் ஆர்சிபி அணியில் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடி வந்த படிக்கல் இடத்தில், வெங்கடேஷ் ஐயர் களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் கூடி வந்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம் ( IPL Auction )அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி அசத்தலாக ஒரு வீரரை வாங்கி இருக்கிறது. கடந்த சீசனில் கேகேஆர் அணியால் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டவர் வெங்கடேஷ் ஐயர். கேகேஆர் அணி அவ்வளவு பெரிய விலைக் கொடுக்க காரணமாக அமைந்தது ஆர்சிபி அணி தான்.

சுமார் ரூ.23 கோடி வரையிலும் வெங்கடேஷ் ஐயர் வாங்க வேண்டும் என்று ஆர்சிபி அணி நிர்வாகிகள் தீவிரமாக இருந்தனர். ஆனால் கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை விடவில்லை. தொடர்ந்து கடந்த சீசனில் வெங்கடேஷ் ஐயர் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட போதும், எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை விடுவித்தது.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக ஆர்சிபி அணி நம்பர் 3 பேட்டிங் வரிசையில் வெங்கடேஷ் ஐயரை விளையாட வைக்கும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் கடைசி நேரத்தில் தேவ்தத் படிக்கலை ஆர்சிபி அணி வாங்கி இருந்தது. சிறப்பாக ஆடிய அவர் பிளே ஆஃப் சுற்றுக்கு முன் காயம் அடைந்து விலகினார்.
இதையடுத்து மயங்க் அகர்வால் ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இறுதிப் போட்டியில் ஆடினார். இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் வாங்கப்பட்டதன் மூலமாக அந்த இடத்தில் இனி இவர் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. மேலும் வெங்கடேஷ் ஐயரை ஆர்சிபி அணி வாங்குவதற்கு தினேஷ் கார்த்திக் முக்கிய காரணம். ஏனென்றால் தினேஷ் கார்த்திக் நெருங்கிய நட்பில் வெங்கடேஷ் ஐயர் இருந்து வருகிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications