ஆணவம்.. ரசிகர்களை துச்சமாக கூட மதிக்காத ஆர்சிபி கேப்டன்.. 11 பேர் மரணத்திற்கு இடையே செய்த ஷாக் செயல்
பெங்களூர்: பெங்களூர் நகரமே சோகத்தில் மூழ்கி உள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த நகரத்தையே உலுக்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி முதல் ஐபிஎல் பட்டத்தை வென்ற கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். மேலும் 55 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேப்டன் செய்த போஸ்ட்
நேற்று 11 பேர் பலியான 2 மணி நேரத்தில் அந்த அணியின் கேப்டன் ராஜத் படிதார் கோப்பையோடு செய்த போஸ்ட் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வெற்றி கொண்டாட்டம் என்று கூறி அவர் கோப்பையோடு கோலி உடன் நிற்கும் விதமாக செய்த போஸ்ட் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அவர் நேரடியாக அப்போது போஸ்ட் போட்டு 11 பேருக்கு இரங்கல் சொல்லவில்லை. அவர்களை பார்க்க வந்து பலியான மக்களை பற்றி பேசவில்லை. ஒரு இரங்கல் ட்வீட் கூட செய்யவில்லை. ஆனால் மிக மோசமாக.. ரசிகர்களை துச்சமாக கூட மதிக்காத ஆர்சிபி கேப்டன் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். ஏற்கனவே பல முறை அந்த போட்டோவை பதிவிட்டவர் தேவையின்றி ரசிகர்கள் பலியான பின்பும் அதே போஸ்டை வெளியிட்டார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சின்னசாமி ஸ்டேடியம் கூட்ட நெரிசல்: நடந்தது என்ன?
சம்பவம் குறித்து நமக்கு கிடைத்த தகவல்களின்படி, பல காரணிகள் இந்த குழப்பத்திற்கு வழிவகுத்தன. முதலாவதாக, சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் கூடியிருந்தனர். ஆரம்பத்தில் 2.5 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணிக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும், விதான் சவுதா உட்பட அந்தப் பகுதியில் மூன்று மடங்கு அதிகமான மக்கள் குவிந்தனர்.
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், "இந்த சம்பவத்திற்குக் காரணம் மக்களின் கட்டுக்கடங்காத உற்சாகமே. எங்களது ஆலோசனையையும், கலைந்து செல்லுமாறு திரும்பத் திரும்பச் செய்த பொது அறிவிப்புகளையும் அவர்கள் கேட்கவில்லை. எப்படியாவது உள்ளே விழா நடக்கும் இடத்திற்குள் சென்றுவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்," என்று கூறி உள்ளார்
கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கூறுகையில், "மக்கள் ஸ்டேடியத்தை நோக்கி சாரை சாரையாக வந்துகொண்டிருந்தனர். நுழைவு வாயில்கள் சிறியதாக இருந்ததால், பாஸ் அல்லது டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், டிக்கெட் இல்லாமல் கொண்டாட்டத்தில் பங்கேற்க பலர் வந்திருந்தனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டியதாயிற்று," என்றார்.

அணிக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாக அறிவிப்பு வந்ததும், மதியம் முதலே கூட்டம் கூடத் தொடங்கியது. காவல்துறையினரின் கணிப்பு தவறானதாக இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. முன்னதாகவே பாஸ் இல்லாதவர்களை தடியடி நடத்தி கலைத்திருந்தால் கூட, இந்த பேரழிவை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
டிக்கெட் இருந்தும் ஸ்டேடியத்திற்குள் நுழைய முடியாத ரசிகர் ஒருவர் கூறுகையில், "அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தார்கள். ஆனால், போதுமான காவல்துறையினர் இல்லை. ஒரே குழப்பமாக இருந்தது," என்றார்.
சம்பவ இடத்தில் இருந்த ரசிகை ஒருவர் கூறுகையில், "ஆர்சிபி என்ற பெயரை பெயர் சொல்ல சொல்ல மக்கள் உள்ளே செல்ல மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். தள்ளுமுள்ளு அதிகமாக இருந்தது. எப்படியோ நாங்க தப்பித்து அருகில் இருந்த சாலைக்கு வந்தோம். தள்ளுமுள்ளுவில் சீட்டு கட்டு போல மக்கள் விழுந்தார்கள்," என்று கூறினார்
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications