ஆர்சிபி மீது போடப்பட்ட எப்ஐஆர்.. கோலி அடுத்து கைது? லண்டன் செல்வதற்காக அவசரமாக நடத்தப்பட்ட விழா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் பலியான மறுநாளே விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் நெரிசல்: ரசிகர்கள் அதிருப்தி

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி கொண்டாட்ட நிகழ்வில், அதிகப்படியான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பலர் காயம் அடைந்தனர். பொதுவாக கிரிக்கெட் அணிகள் வெற்றிபெற்றால் அதற்கு வெற்றிகொண்டாட்டம் சில நாட்களுக்கு பின் நடக்கும் . இந்திய அணி டி 20 உலகக்கோப்பை வென்ற பின் 5 நாட்கள் கழித்து கொண்டாட்டம் நடந்தது. சிஎஸ்கே மும்பை அணிகள் வென்றால் 3 -4 நாட்கள் கழித்த கொண்டாட்டம் நடக்கும். ஆனால் பெங்களூர் அணி கோப்பை வென்ற மறுநாளே கொண்டாட்டம் நடந்தது.

RCB Victory stampede in Bangalore Why fans are asking for the arrest of Kohli as he left for London

கிரிக்கெட் வீரர் கோலி லண்டனில் வசிக்கிறார். அவர் லண்டன் செல்ல திட்டமிட்டு இருந்தார். அவர் லண்டன் செல்ல வசதியாக அவசர அவசரமாக இந்த விழா நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக இந்த விழா குறித்து தங்களுக்கே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளதால்.. விழாவை அவசர அவசரமாக நடத்த சொன்னது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறுநாளே.. அதாவது நேற்றே விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனுக்குப் புறப்பட்டதை அறிந்த ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு ஒருவகையில் கோலியும்தான் காரணம். அதனால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு ரசிகர் கூறுகையில், "மைதானத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த நெரிசலுக்கு காரணம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மற்றொரு ரசிகர், "விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் லண்டன் செல்வது சரியல்ல.. இந்த திட்டமிடலில் அவர்களுக்கும் பொறுப்பு உள்ளதால் அவர்களையும் கைது செய்ய வேண்டும்" என்று தனது கருத்தை கூறியுள்ளார்.

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட இந்த நெரிசல் சம்பவம், விளையாட்டு மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருந்தவர்களை விட, அணியின் வீரர்களைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, மைதான வளாகத்திற்கு அருகிலுள்ள வடிகால் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கான்கிரீட் தளம் மீது அதிகப்படியான மக்கள் நின்றதால் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்சிபி கிரிக்கெட் அணியின் மீது எப்ஐஆரும் பதியப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+