RCB: அந்த 2 வீரர்களை தாண்டினால் போதும்.. ஆர்சிபி அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது!
சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்நிய மண்ணில் ஆடிய போட்டிகளில் ஆர்சிபி அணி கெத்து காட்டி வரும் நிலையில், அதனை தொடரும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலியின் நிதானம் ஆர்சிபி அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுக்கிறது. பஞ்சாப் அணியின் 2 ஸ்பின்னர்களை சரியாக கணித்து விளையாடினால், ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. பிளே ஆஃபின் குவாலிஃபையர் முதல் சுற்றில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடுகிறது. புள்ளிப் பட்டியலில் இரு அணிகளும் தலா 19 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3 வீரர்கள் காயம்
பிளே ஆஃப் சுற்றை பொறுத்தவரை சில சர்வதேச வீரர்கள் சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியின் மார்கோ யான்சன், ஆர்சிபி அணியின் லுங்கி இங்கிடி, ஜேக்கப் பெத்தெல் உள்ளிட்டோர் விளையாடவில்லை. ஏற்கனவே ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், அதிரடி வீரர் டிம் டேவிட் மற்றும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் ஆகிய 3 பேரும் காயத்தில் உள்ளனர்.
ஹேசல்வுட் களமிறங்குவாரா?
இதில் ரஜத் பட்டிதார் இம்பேக்ட் பிளேயராகவே இன்றைய ஆட்டத்திலும் விளையாட இருக்கிறார். அதேபோல் டிம் டேவிட் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஹேசல்வுட் மட்டும் முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். இதனால் நுவான் துஷாராவுக்கு பதிலாக ஜோஷ் ஹேசல்வுட் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணியின் சாதனை
அதேபோல் குவாலிஃபையர் முதல் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த சீசனில் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. அந்நிய மண்ணில் ஆர்சிபி அணி விளையாடிய அத்தனை போட்டிகளிலும் வென்றிருப்பதால், அதனை நிச்சயம் தொடரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
விராட் கோலி நிதானம்
அதுமட்டுமல்லாமல் கடந்த போட்டியில் ஆர்சிபி அணி மிகப்பெரிய வெற்றியை பெற்ற போது, ஓய்வறையில் இருந்த விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே கொண்டாட்டம் தேவையில்லை. நிதானமாக விளையாடி மொத்த வேலையையும் முடித்துவிட்டு வருமாறு ஜித்தேஷ் சர்மாவுக்கு அறிவுறுத்தினார். இதனால் ஆர்சிபி அணி இம்முறை கோப்பை மீதே கண்களை வைத்திருக்கிறது.
2 வீரர்கள்
ஆனால் ஆர்சிபி அணியில் க்ருணால் பாண்டியாவை தவிர்த்து மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே வலதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இதனால் பஞ்சாப் அணியின் ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் சாஹல் ஆகிய இரு ஸ்பின்னர்களையும் அந்த அணி களமிறக்கும். இவர்களை கவனமாக விளையாடினால், ஆர்சிபி அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications