சின்னச்சாமியில் மட்டுமே பயம்.. அந்நிய மண்ணில் அசால்ட் காட்டுவோம்.. ஆர்சிபி வெல்ல காரணமே அவர் தான்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு மீண்டும் க்ருணால் பாண்டியா முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அதேபோல் அந்நிய மண்ணில் ஆர்சிபி அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் பில் சால்ட் 33 பந்துகளில் 65 ரன்களையும், விராட் கோலி 45 பந்துகளில் 62 ரன்களையும், படிக்கல் 40 ரன்களையும் விளாசினர். இந்த வெற்றியின் மூலமாக ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனால் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி பாதி கடலை கடந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்களை விடவும் பவுலர்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். குறிப்பாக ஸ்பின்னரான க்ருணால் பாண்டியாவின் ஆர்சிபி அணிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய க்ருணால் பாண்டியா 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். அதுவும் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனின் விக்கெட்டை கைப்பற்றி சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளார். இதுவரை ஆடிய போட்டிகளில் பேட்டிங்கில் இல்லையென்றாலும், க்ருணால் பாண்டியாவின் பவுலிங் அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது.
இதனால் ஆர்சிபி அணியில் இருக்கும் ஸ்பின் பிரச்சனையை எளிதாக க்ருணால் பாண்டியா சமாளித்து வருகிறார். இதனால் அந்நிய மண்ணிலும் ஆர்சிபி அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது. சின்னச்சாமி மைதானத்தில் மட்டும் வெற்றி பெறுவதற்கான சூட்சமத்தை ஆர்சிபி அணி தெரிந்து கொண்டால், அந்த அணி இம்முறை ஈசாலா கப் நம்தே என்று தைரியமாக சொல்லலாம்.












Click it and Unblock the Notifications