Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா.. கோலியும் இல்லை! ரோஹித்தும் இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதேநேரம் கிரிக்கெட் மூலம் அதிகம் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் லிஸ்டில் யார் முதலிடம் என்று உங்களுக்கு தெரியுமா.. பலரும் கேப்டன் ரோஹித் அல்லது நட்சத்திர வீரர் கோலி என்றே நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இருவருமே இல்லை.. கிரிக்கெட் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நபர் யார்.. அடுத்தடு்தத இடங்களில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் பார்க்கலாம்,

நமது நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் புரண்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் ஐபிஎல் வந்த பிறகு இவர்களின் ஊதியம் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

ipl auction virat kohli

யார் அதிகம்: கிரிக்கெட் மூலம் அதிகம் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட்டார் யார் தெரியுமா.. பலரும் இந்திய கேப்டன் ரோஹித் அல்லது நட்சத்திர வீரர் கோலி என்றே நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் இருவமே இல்லை. ஐபிஎல் ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் போன நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் மூலம் அதிக வருவாய் பார்க்கும் வீரர் என்ற சிறப்பை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.

கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பண்ட்டை ரூ. 27 கோடி கொடுத்து லக்னோ அணி ஏலத்தில் எடுத்து இருந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற பெயரை பண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்பு மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா ரூ. 24.75 கோடி கொடுத்து ஏலம் எடுத்த நிலையில், அதை இப்போது ரிஷப் பண்ட் ஓவர்டேக் செய்துள்ளார். இதன் மூலம் பண்டிற்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி கிடைக்கும்.

எவ்வளவு வருமானம்: இது தவிர அவர் பிசிசிஐ வருடாந்திர ஒப்பதந்திலும் பி பிரிவில் இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த இரண்டையும் சேர்த்தால் அவருக்கு கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஆண்டுக்கு ரூ. 30 கோடி வருவாயாக கிடைக்கும். பண்ட் இதற்கு முன்பு பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ பிரிவில் இருந்தார். கார் விபத்து காரணமாக அவர் இடையில் சில காலம் விளையாடாமல் இருந்ததால் அவர் கிரேடு Bக்கு இறக்கப்பட்டார்.

இப்போது மீண்டும் எல்லா போட்டிகளிலும் அவர் கலக்கி வரும் நிலையில், மீண்டும் ஏ பிரிவுக்கு வரலாம்.. அல்லது ஏ பிளஸ் பிரிவுக்கு கூட செல்லலாம். இன்னும் சில வாரங்களில் இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், பண்ட்டின் ஊதியம் மேலும் கூட அதிகரிக்கலாம்.

கோலி: பண்ட்டிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராரன கோலி இருக்கிறார். 36 வயதான கோலியை பெங்களூர் அணி நிர்வாகம் ரூ. 21 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. பிசிசிஐ ஒப்பந்தத்தில் அவர் ஏ பிளஸ்ஸில் இருப்பதால் அவருக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியமாக கிடைக்கிறது. இரண்டையும் சேர்த்தால் அவருக்கு கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ரூ. 28 கோடி வருமானம் கிடைக்கும்.

ipl auction virat kohli

ஸ்ரேயஸ் ஐயர்: இதற்கு அடுத்த இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் இருக்கிறார். பிசிசிஐ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் போட்டிகளில் ஆட மறுத்ததால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் பிசிசிஐ ஆண்டு வருமானம் அவருக்கு கிடைக்காது. அதேநேரம் ஐபிஎல் தொடரில் அவரை பஞ்சாப் அணி ரூ. 26.75 கோடி கொடுத்து ஏலம் எடுத்துள்ளதால் அவர், இந்த லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறார்.

ipl auction virat kohli

அடுத்து யார்: பும்ரா மற்றும் ஜடேஜா இருவரையும் மும்பை மற்றும் சென்னை அணிகள் ரூ. 18 கோடிக்கு தக்கவைத்துள்ளன. அவர்கள் பிசிசிஐ ஒப்பந்ததில் ஏ பிளஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் இருவருமே ரூ. 25 கோடி வருமானத்துடன் 4ம் இடத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அடுத்த இடத்தில் ரோஹித் (ஐபிஎல் ஊதியம் ரூ. 16.30 கோடி, கிரேட் ஏ கான்டிராக்ட் ஊதியம் ரூ. 7 கோடி) என்று ரூ. 23.30 கோடி ஊதியத்துடன் இருக்கிறார்.

ipl auction virat kohli

தொடர்ந்து ஹர்த்திக் பாண்டியா (ஐபிஎல் ஊதியம் ரூ. 16.35 கோடி, கிரேட் ஏ கான்டிராக்ட் ஊதியம் ரூ. 5 கோடி) என மொத்தம் ரூ. 21.35 கோடி ஊதியத்துடன் அடுத்த இடத்தில் இருக்கிறார். அதேநேரம் இதில் விளம்பர வருவாய் உள்ளிட்ட பிற வருவாய்களில் சேர்க்கப்படவில்லை. அதை சேர்த்தால் இந்த லிஸ்ட் மாறும்.

ipl auction virat kohli
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+