இறுதி போட்டி முடிந்த கையோடு ஓய்வு பெறும் ரோஹித் சர்மா? அடுத்த "கேப்டன்" இவர் தானாம்! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப் போட்டி நாளை துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இதற்கிடையே நாளைய போட்டியுடன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா சம்மதிக்கவில்லை. இதையடுத்து இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்தால் அதுவும் துபாயிலேயே நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

Champions Trophy 2025 Rohit Sharma

ரோஹித் எதிர்காலம்

லீக் சுற்றில் டாப் இடத்தை பிடித்த இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்க உள்ளது. இதற்கு இரு அணிகளும் தயாராகி வருகிறது. பைனல்ஸ் ஒரு பக்கம் என்றால்.. ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்தும் இங்குப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

என்ன காரணம்?

ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் 2 மாதங்களில் 38 வயதாகிவிடும். இப்போது சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் நிலையில், அடுத்து உலகக் கோப்பை 2027ல் தான் நடைபெறுகிறது. அதுவரை ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது சந்தேகம். அதேநேரம் 2027க்கு சற்று முன்பு ஓய்வு பெற்றாலும், குறுகிய காலத்திற்குள் உலகக் கோப்பைக்கு அணியை வழிநடத்த புதிய கேப்டன் செட் ஆவது சிரமம். இந்தச் சூழலில் தான் ரோஹித் சர்மா நாளை மிகப் பெரிய முடிவை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

அணியின் அழுத்தம் இல்லை

அதாவது நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்தியா வெற்றி பெற்றால் ரோஹித் சர்மா என்ன முடிவை எடுப்பார் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. அதேநேரம் ஓய்வு அல்லது தொடர்ந்து விளையாடுவது என எந்த முடிவாக இருந்தாலும் அது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். அணியின் தரப்பில் எந்தவொரு அழுத்தமும் தரப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

அடுத்த கேப்டன் யார்

மேலும், இந்திய அணி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வென்றாலும் கூட ரோஹித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலகலாம் எனச் சொல்லப்படுகிறது. அப்போது அவர் அணியில் சாதாரண ஒரு வீரராகவே தொடர்வார். அப்போது இளம் வீரர்களான கில் அல்லது ஹர்திக் பாண்டியா அல்லது ஸ்ரேயஸ் ஐயர் வசம் கேப்டன்சி ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. இப்போதே கேப்டன்சியை இளம் வீரருக்கு ஒப்படைத்தால் 2027 உலகக் கோப்பைக்குத் தயாராக போதுமான டைம் இருக்கும் என்பதாலேயே இந்த முடிவை யோசித்து வருகிறார்கள்.

Champions Trophy 2025 Rohit Sharma

டி20 போட்டிகள்

முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, கோப்பையை வென்றது. அந்த போட்டியுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+