ரோகித், நமன், திலக், ரிக்கல்டன்.. மும்பை அணியை பவர் பிளேவிலேயே முடித்த ராஜஸ்தான்.. சோலி முடிஞ்ச்!
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோகித் சர்மா, நமன் திர், ரிக்கல்டன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் வெறும் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறி வருகிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஒருவேளை ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால், அது பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாறும். இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஜுரெல் 38 ரன்களியும், ஆர்ச்சர் 15 பந்தில் 32 ரன்களையும், ஷனகா 15 பந்துகளில் 29 ரன்களையும் குவித்தனர். மும்பை அணி தரப்பில் தீபக் சஹர் மற்றும் தாகூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் மும்பை அணியின் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் மும்பை அணிக்காக ரோகித் சர்மா - ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ரிக்கல்டன் அடுத்த ஓவரிலேயே சிக்ஸ், பவுண்டரி விளாசி அதிரடியாக தொடங்கினார். இதன்பின் ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் நமன் திர் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் பர்கர் வீசிய 4வது ஓவரில் ரிக்கல்டன் 12 ரன்களில் ஆட்டமிழக்க, பிரிஜேஷ் சர்மா வீசிய 6வது ஓவரில் திலக் வர்மா 3 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். இதனால் மும்பை அணி 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மும்பை மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் போதே, மும்பை வீரர்கள் பவர் பிளேவில் மட்டும் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர்.
இதனால் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கியுள்ளது. பிட்சில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஓரளவிற்கு ஒத்துழைப்பு இருப்பதால், ஜடேஜாவின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் வில் ஜாக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications