இப்படிதான் கேப்டன்சி செய்யணும்.. 2 போட்டிகளிலேயே ருதுராஜ் கொடுத்த மாற்றம்.. தோனிக்கு ஆறுதல்!
சென்னை: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் செய்த பவுலிங் மாற்றங்கள் மற்றும் ஃபீல்டிங் திட்டம் ஆகியவை பாராட்டுக்களை பெற்று வருகிறது. குறிப்பாக சுனில் நரைன் மற்றும் ராமன்தீப் சிங் ஆகியோருக்கு வைக்கப்பட்ட ஷார்ட் தேர்டு மேன் திட்டம் ருதுராஜ் கெய்க்வாட் முன்னேறி வருவதற்கான அறிகுறியாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

சிறப்பாக பவுலிங் செய்த நூர் அஹ்மத் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் 3 போட்டிகளில் நூர் அஹ்மத் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய நூர் அஹ்மத், இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதிலும் கேமரூன் க்ரீனை ஒரே பந்தில் வீழ்த்தியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
இதன் பின்னணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருந்திருக்கிறார். இந்தப் போட்டியில் சுனில் நரைன் தொடக்க வீரராக களமிறங்கிய போது பவர் பிளே ஓவர்களில் அகீல் ஹொசைன் அட்டாக்கில் கொண்டு வரப்படவில்லை. கலீல் அஹ்மத் அவரை ஏராளமான முறை வீழ்த்தியதால், வேகப்பந்துவீச்சாளர்களுடன் பவர் பிளேவை அணுகினார்.
அதேபோல் சுனில் நரைனுக்கு ஃபுல்லர் லெந்தில் வீசினார் வீழ்த்தலாம் என்ற திட்டத்தையும் சரியாக அரங்கேற்றினர். அதற்கேற்ப ஃபீல்ட் செட்டப்பில் ஷார்ட் தேர்டு மேன் வைத்து கொண்டது மிகச்சிறந்த முடிவு. அதேபோல் நூர் அஹ்மத் பவுலிங் செய்யும் போது, ஸ்டம்புகளை அட்டாக் செய்ய வேண்டும். அப்படி அட்டாக் செய்யும் பட்சத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க வாய்ப்புகள் உள்ளது.
இதனை புரிந்து கொண்டு நூர் அஹ்மத்தை அட்டாக்கில் கொண்டு வருவதற்கு முன் அகீல் ஹொசைனௌ வைத்து அந்த ஓவரை கட்டுக்குள் வைத்தார். இதனால் நூர் அஹ்மத் ரன் ரேட் பிரஷர் இல்லாமல், விக்கெட்டை வீழ்த்தினர் என்றே சொல்லலாம். குர்ஜப்னீத் சிங், ஓவர்டன் உள்ளிட்டோரையும் மிகத் தெளிவாக தாமதமாகவே அட்டாக்கில் கொண்டு வந்தார்.
அதேபோல் கடைசி நேரத்தில் கூட ராமன்தீப் சிங்கிற்கு ஷார்ட் தேர்டு மேன் வைத்து விக்கெட்டை வீழ்த்தியது அபாரம் என்றே சொல்லலாம். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் ஒவ்வொரு வெற்றியின் போதும் ஒரு கேப்டனாக நல்ல முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதேபோல் ஓய்வறையில் கொடுக்கப்படும் திட்டங்களை சரியாக களத்தில் செயல்படுத்தி வருவது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இது தோனிக்கும் ஆறுதலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications