இதுதான்டா கேப்டன் டைமிங்.. சஞ்சு சாம்சன் அவுட்டானால் என்ன.. கடைசி வரை நின்று சம்பவம் செய்த ருதுராஜ்!
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் முதல் பாதியில் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்மின்றி தவித்தார். ஆனால் சஞ்சு சாம்சன் விரைவாக ஆட்டமிழந்த போது, ருதுராஜ் கெய்க்வாட் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து சிஎஸ்கே அணியை காப்பாற்றி இருக்கிறார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

சிஎஸ்கே அணி தரப்பில் சிறப்பாக ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 67 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் இளம் வீரர் கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 54 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை களத்தில் நின்று சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் இந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்மின்றி தவிர்த்தார். அந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை மட்டுமே நம்பி இருந்தது. ஆனால் ஆயுஷ் மாத்ரே திடீரென காயம் அடைந்து வெளியேறினார்.
இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தடுமாற, ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். அப்போது ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்ததாக பார்க்கப்பட்டது. தற்போது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 34 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.
இந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பை எடுத்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் இளம் வீரரான கார்த்திக் சர்மாவுக்கு அழுத்தம் கொடுக்காமல் நிதானமாக ஆட அறிவுறுத்தி, கடைசி வரை களத்தில் நிற்கவும் காரணமாகவும் அமைந்தார். இதனால் சரியான் நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications