3வது ஓவரிலேயே சான்ட்னர் செய்த தவறு.. உஷாரான சஞ்சு சாம்சன்.. நியூசிலாந்து அணி எடுத்த மோசமான முடிவு!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 3வது ஓவரில் எடுத்த தவறான முடிவு இந்திய அணிக்கு சாதகமாக மாறி இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே தங்கள் மீதான அழுத்தத்தை குறைந்துகொண்டனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி முதல் ஓவரை வீசினார்.

மேட் ஹென்றியின் பந்துகள் அதிகமாக ஸ்விங்காகும் என்பதால், சஞ்சு சாம்சன் கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடினார். அந்த ஓவரின் 5வது பந்தில் ஃபிளாட் லெந்தில் ஒரு பந்து கிடைக்க, அதனை சஞ்சு சாம்சன் சிக்ஸர் ஆக்கினார். தொடர்ந்து 2வது ஓவரில் கிளென் பிலிப்ஸ் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அது அபிஷேக் சர்மாவுக்கு விரித்த வலையாக அமைந்தது.
இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா இருவருமே எந்த ரிஸ்கையும் எடுக்கவில்லை. அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இப்படியான சூழலில் மீண்டும் மேட் ஹென்றி அட்டாக்கில் வருவார் என்று நம்பப்பட்ட போது, திடீரென ஜேக்கப் டெஃபி அட்டாக்கில் வந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்களை விளாசியது.
இப்போதாவது மேட் ஹென்றி அட்டாக்கில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ஃபெர்குசன் அட்டாக்கில் வந்தார். இந்த ஓவரை பயன்படுத்தி 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 24 ரன்களை குவித்தனர். முதல் 2 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட சூழலில், அடுத்த 2 ஓவர்களில் 39 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலமாக இரு தொடக்க வீரர்களும் நம்பிக்கை பெற்றனர்.
முதல் 4 ஓவர்களையும் வீசுவதற்கு 4 பவுலர்களை நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பயன்படுத்தி மிகப்பெரிய தவறாக மாறியது. ஏனென்றால் பிட்சில் தொடக்கத்தில் கிடைத்த கொஞ்சம் ஸ்விங்கும் மேட் ஹென்றிக்கு 5வது ஓவரில் கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனுக்கு எதிராக 3 இன்னிங்ஸில் ஆடியுள்ள ஹென்றி 2 முறை விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரை அட்டாக்கில் இருந்து வெளியேற்றியது மோசமான தவறாக அமைந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications