Samson: சொந்த கேப்டன், பயிற்சியாளரால் ஏற்பட்ட அவமானம்.. காத்திருந்து கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன்!
கொல்கத்தா: டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனியாளாக விளையாடி இந்திய அணியை அரையிறுதி சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார் சஞ்சு சாம்சன். அவரின் இந்த இன்னிங்ஸுக்கு பின் பல்வேறு அவமானங்களும், காத்திருப்பும் இருந்துள்ளது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் இந்திய டி20 அணிக்குள் சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டார். சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டதால், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கினார். சுமார் 18 மாதங்களாக இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரராக விளையாடி சாதித்த சஞ்சு சாம்சன், திடீரென சுப்மன் கில்லின் வரலா தூக்கி எறியப்பட்டார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு 6 மாதங்களுக்கு முன் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்ட சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவியையும் பிசிசிஐ கொடுத்தது. இதனால் 18 ஆண்டுகளாக தொடக்க வீரராக தயாராகி வந்த சஞ்சு சாம்சன், எந்தவித கேள்வியும் இல்லாமல் அந்த இடத்தை சுப்மன் கில்லுக்கு விட்டுக் கொடுத்தார். இதனால் ஆசியக் கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் விளையாடி வந்தார்.
அதற்கேற்ப ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாகவே விளையாடி இருந்தார். இருப்பினும் திடீரென ஜித்தேஷ் சர்மா உள்ளே கொண்டு வரப்பட்டு, சஞ்சு சாம்சன் வெளியில் அமர வைக்கப்பட்டார். ஆனால் சுப்மன் கில்லின் அவுட் ஆஃப் ஃபார்ம் அவருக்கு எதிராக திரும்பியது. டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்டதால் இந்திய அணி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
இதன்பின் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக தேர்வு செய்தது. ஆனால் நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சன் ஃபார்மின்றி ரன்கள் குவிக்க தடுமாறியதால், இஷான் கிஷன் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் மீண்டும் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் எதிரணி செய்த சில டிவிஸ்ட் காரணமாக அபிஷேக் சர்மாவின் வீக்னஸ் வெளியில் வந்தது. இதனால் இடது கை - வலது கை காம்பினேஷனில் தொடக்க வீரர்களை களமிறக்க வேண்டிய நிலை உருவாகியது. அப்படி வந்த சஞ்சு சாம்சன், சரியான நேரத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத இன்னிங்ஸை விளையாடி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருந்தால், இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கும். இப்போது சஞ்சு சாம்சனின் இடத்தை பற்றி யாரும் கேள்வி கேட்க போவதில்லை. ஆனால் பிசிசிஐ மற்றும் கம்பீர் செய்த அரசியல் தான் ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.
ஏனென்றால் இஷான் கிஷன் சிறந்த இன்னிங்ஸை விளையாடும் போது, தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கம்பீர் முடிவு செய்தார். ஆனால் சஞ்சு சாம்சன் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது ஏன் திடீரென சுப்மன் கில் கொண்டு வரப்பட்டார் என்பதே கேள்வியாக உள்ளது. இவ்வளவு ஏன் கேப்டன் சூர்யகுமார் யாதவால் சில நாட்களுக்கு முன் சஞ்சு சாம்சன் அவமானப்படுத்தப்பட்டார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சஞ்சு சாம்சனை யாருடைய இடத்தில் விளையாட வைப்பீர்கள்.. அபிஷேக் சர்மாவின் இடத்திலா.. திலக் வர்மாவின் இடத்திலா.. இஷான் கிஷனின் இடத்திலா என்று எதிர் கேள்வியை கேட்டார். அந்த கேள்விக்கு இப்போது சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸ் பதிலாக அமைந்திருக்கிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications