உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல்.. திடீரென மைதானத்துக்குள் அத்துமீறி குதித்த பாலஸ்தீன ஆதரவாளர் கைது!
அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்று வந்த அகமதாபாத்ம மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

அகமாதாபாத் மைதானத்தில் 1.25 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து இறுதிப் போட்டியை பார்வையிட்டனர்.மைதானத்துக்கு வெளியேயும் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஒட்டுமொத்த தேசமும் இந்த இறுதிப் போட்டியை ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தலைவர்கள் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் அகமதாபாத் மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பாலஸ்தீன கொடி பொறித்த முக கவசத்துடன் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து கோலியை சந்தித்தார். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரை தடுத்த நிறுத்த வலியுறுத்தியும் டி சர்ட் அணிந்திருந்தார் அந்த மர்ம நபர். உடனடியாக போலீசார், மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபரை கைது செய்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications