12 ஆண்டுகளில் முதல் சதம்.. தேவையான நேரத்தில் வித்தையை காட்டிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ: 12 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயர் பல்வேறு சதத்திற்கு அருகில் வந்திருந்தாலும், ஒருமுறை கூட சதம் அடிக்கவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய பின், ஸ்ரேயாஸ் ஐயர் கூடுதல் உற்சாகத்துடன் இருந்தார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. ஜோஷ் இங்லிஸ் மட்டும் 44 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். இதன்பின் பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

சிறப்பாக ஆடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 69 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்த 18 பந்துகளில் சதத்தை எட்டி அசத்தி இருக்கிறார்.
அதிலும் முகமது ஷமி பவுலிங்கில் 3 சிக்சர்களை ஸ்ரேயாஸ் ஐயர் விளாசியது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் மொத்தமாக 13 இன்னிங்ஸில் ஒரு சதம், 5 அரைசதங்கள் உட்பட 498 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
2015ஆம் ஆண்டிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இருந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரிலேயே பெரும்பாலான போட்டிகளில் ஆடி இருக்கிறார். சில போட்டிகளில் முதல் சில ஓவரிலேயே களமிறங்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும், சதம் அடிக்க முடியவில்லை. 4 இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு மேல் அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்திருக்கிறார்.
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு மிக முக்கியமான போட்டியான இன்று ஸ்ரேயாஸ் ஐயர் மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி முன்னேறினால், இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications