ஸ்பின்னர்களை பார்த்தாலே பயம்.. அபிஷேக் சர்மா, திலக் வர்மாவுக்கு செக்! இந்திய அணிக்கு ஆப்பு நிச்சயம்?
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளிட்டோர் மோசமான ஃபார்மில் இருப்பது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. சூப்பர் 8 சுற்று தொடங்க இருக்கும் சூழலில், இந்திய டாப் ஆர்டர் பலமின்றி இருப்பதால், ரசிகர்கள் கவலை அடைந்திருக்கின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 4லும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தினாலும், இந்திய அணி சில பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களில் இஷான் கிஷன் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார்.

தொடக்க வீரராக வரும் அபிஷேக் சர்மா 3 இன்னிங்ஸில் தொடர்ச்சியாக டக் அவுட்டாகி ஏமாற்றி இருக்கிறார். மறுபக்கம் திலக் வர்மா 4 இன்னிங்ஸில் ஒரு போட்டியில் கூட சிறந்த இன்னிங்ஸை ஆடவில்லை. நல்ல தொடக்கம் கிடைத்த போதும் திலக் வர்மா இப்படியான இன்னிங்ஸை ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த இருவரின் மோசமான ஆட்டத்தால் நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் மீதும் அழுத்தம் உருவாகிறது. இதனால் சிவம் துபே, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரையே இந்திய அணி நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அதேபோல் ஐசிசி கண்காணிப்பில் பிட்ச் இருப்பதால், 200 ரன்கள் சேர்ப்பதே கடினமாக உள்ளது.
இதனால் ஒவ்வொரு போட்டியிலும் பும்ரா, வருண் சக்கரவர்த்தி தான் இந்திய அணியை காப்பாற்றி வருகின்றனர். இந்திய அணியில் ஏராளமான சிக்கல் இருக்கும் சூழலில், சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்களின் மிக முக்கிய பிரச்சனையாக ஸ்பின் இருக்கிறது. ஸ்பின்னர்களை முதல் ஓவரிலேயே கொண்டு வந்து அபிஷேக் சர்மாவுக்கு எதிராக எதிரணிகள் கட்டம் கட்டிவிடுகிறார்கள்.
அதற்கேற்ப அபிஷேக் சர்மா கொஞ்சம் கூட தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. சஞ்சு சாம்சன் 5 இன்னிங்ஸில் முறையாக விளையாடாததால், அவர் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். ஆனால் அபிஷேக் சர்மா கடைசியாக ஆடிய 7 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட்டாகி இருக்கிறார்.
இதனால் சஞ்சு சாம்சனே பரவாயில்லை என்று ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர். வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளில் தரமான ஸ்பின்னர்களும், அதிரடி பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். அவர்களை சமாளிக்க இந்திய அணி இப்படியான ஃபார்மில் சென்றால், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதே கடினம் என்று பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications