7வது முறை.. கொஞ்சம் கூட திருந்தாத அபிஷேக் சர்மா.. அவசியமில்லாத ஷாட் ஆடி மீண்டும் ஸ்பின்னரிடம் அவுட்!
மும்பை: டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ஆஃப் ஸ்பின்னரிடம் விக்கெட்டை கொடுத்துள்ளார். வில் ஜாக்ஸ் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய போதும், தேவையில்லாமல் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறி கொடுத்திருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இங்கிலாந்து அணிக்காக முதல் ஓவரை ஆர்ச்சர் வீசினார்.

ஆர்ச்சருக்கு எதிராக 5 போட்டிகளில் ஆடியுள்ள சஞ்சு சாம்சன், 3 முறை விக்கெட்டை கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால் சஞ்சு சாம்சன் நிதானமாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி அசத்தினார். தொடர்ந்து அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்த ஆஃப் ஸ்பின்னரான வில் ஜாக்ஸ் அட்டாக்கில் வந்தார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா பவுண்டரி அடிக்க, அடுத்த 3 பந்துகளில் ஒரு ரன் கூட சேர்க்கப்படவில்லை. இருந்தாலும் 5வது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடிக்க ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இதன்பின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து மறுமுனைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தேவையில்லாமல் சிக்ஸ் அடிக்க முயற்சித்து டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார்.
அங்கு தயாராக நின்றிருந்த பில் சால்ட் அந்த கேட்சை எளிதாக பிடித்தார். இதனால் அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக அபிஷேக் சர்மா மீண்டும் ஆஃப் ஸ்பின்னரிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி இருக்கிறார். இதுவரை 19 இன்னிங்ஸில் ஆஃப் ஸ்பின்னர்களை எதிர்கொண்டுள்ள அபிஷேக் சர்மா 7வது முறையாக ஆஃப் ஸ்பின்னரிடம் விக்கெட்டாகி இருக்கிறார்.
இதனால் இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அபிஷேக் சர்மா ஸ்வீப் ஷாட்டை விளையாட முயற்சிக்கும் வரை இதே பாணியில் எதிரணிகள் அட்டாக் செய்வார்கள் என்பது தெரிந்துவிட்டது. இதனால் அபிஷேக் சர்மாவை இந்திய அணி சுயபரிசோதனை செய்ய வெளியில் அமர வைக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications