அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்?
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து அபிஷேக் சர்மாவை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு பதிலாக ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் கொண்டு வர கம்பீர் ஆலோசித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பலை சரி செய்ய கம்பீர் முடிவு செய்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக ஒரே பாணியில் ஆட்டமிழந்து வருகிறார். ஸ்பின்னர்களுக்கு எதிரான அபிஷேக் சர்மாவிடம் ஸ்வீப் ஷாட் இல்லாததை அறிந்துள்ள எதிரணி, தொடர்ச்சியாக ஆஃப் ஸ்பின்னரை வைத்து அட்டாக் செய்கிறது. அவரிடம் ஆஃப் ஸ்பின்னர்களை சமாளிக்க பெரிய ஷாட்களும் இல்லை.
இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷீத், வில் ஜாக்ஸ் என்று ஸ்பின்னர்கள் இருப்பதால், அபிஷேக் சர்மாவுக்கு சிக்கல் கூடுதலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா பிளேயிங் லெவனில் இருந்து நீக்கலாமா என்று கவுதம் கம்பீர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன் கூட்டணியை களமிறக்கக் கூடும்.
அதேபோல் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் மும்பை வான்கடே மைதானத்தில் பலமான மிடில் ஆர்டர் அவசியம். ஹர்திக் பாண்டியா பெரிய ஃபார்மில் இல்லாத சூழலில், திலக் வர்மா மற்றும் சிவம் துபே மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர். அக்சர் படேலுக்கும் பெரியளவில் பேட்டிங்கில் கேம் டைம் கிடைக்கவில்லை.
இதனால் ரிங்கு சிங்கை உள்ளே கொண்டு வந்தால், அவரால் எளிதாக ஃபினிஷிங்கில் கைகொடுக்க முடியும். அதேபோல் வான்கடே மைதானத்தில் பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கும் வெற்றி பெற கூடுதலாக வாய்ப்புகள் உள்ளது. அதற்கேற்ப சில முடிவுகளை எடுக்க கவுதம் கம்பீர் ஆலோசிப்பதாக தெரிகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications