வருண் சக்கரவர்த்திக்கு சுயபரிசோதனை அவசியம்.. ஜிம்பாப்வே வரை தெரிந்துள்ள ரகசியம்.. இதுதான் சிக்கல்!
சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அபார வெற்றியை பெற்றாலும், இந்திய பவுலர்களின் செயல்பாடுகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நம்பர் 1 டி20 பவுலரான வருண் சக்கரவர்த்தி பந்தை ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களும் அட்டாக் செய்திருப்பது அவர் மீண்டும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது,. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது.

சிறப்பாக ஆடிய பென்னட் பென்னட் 59 பந்துகளில் 97 ரன்களை குவித்து அசத்தினார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இது சிறந்த ஆட்டமாக அமைந்திருந்தாலும், பவுலர்களுக்கு மீண்டும் ஒரு சோதனையான போட்டியாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்துகளில் கூடுதலாக பவுண்டரிகள், சிக்சர்கள் அடிக்க தொடங்கி இருக்கின்றன.
குறிப்பாக வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் இந்திய ரசிகர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் அவரின் எகனாமி 7.20 ஆக இருக்கிறது. அதேபோல் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் நுணுக்கங்களை எதிரணிகள் நன்றாக அறிந்துவிட்டனர்.
எந்த அளவிற்கு அறிந்துள்ளனர் என்றால், அவர் முதல் பந்தை கூக்ளியாக தான் வீசுவார் என்பது வரை தெரிந்து கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா போட்டிக்கு எதிராகவும் வருண் சக்கரவர்த்தி முதல் ஓவரிலேயே அட்டாக் செய்யப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட வேண்டும் என்பது வரை அறிந்திருக்கின்றனர்.
அவரிடம் இருக்கும் வெரைட்டியான பந்துகளை எப்போதெல்லாம் வீசுகிறார், என்ன லெந்தில் வீசுகிறார் என்பதை ஆராய்ந்திருக்கின்றனர். இதனால் வருண் சக்கரவர்த்தி எந்த லெந்தில் வீசினால் அட்டாக் செய்யலாம் என்ற மாற்று திட்டத்தோடு ஒவ்வொரு அணியும் களமிறங்குகிறது. இதனால் வரும் போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் வருண் சக்கரவர்த்தி லெந்தில் சமரசம் இல்லாமல், விக்கெட்டுக்கு பவுலிங் செய்யாமல் விளையாட வேண்டும் என்றும் விமர்சினங்கள் எழுந்துள்ளன. அதேபோல் சிவம் துபேவுக்கு அதிக வேலைப்பளு கொடுத்து விளையாட வைக்கக் கூடாது என்றும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்களில் சிவம் துபே பவுலிங் செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறி தான்.












Click it and Unblock the Notifications