வான்கடே மைதானத்தை சைலண்ட் செய்யணும்.. இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன்.. ஹாரி ப்ரூக் சவால்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடும் வாய்ப்புக்காக காத்திருந்ததாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் கூறியுள்ளார். மும்பை மைதானத்தில் இந்திய அணிக்கு அதிக ஆதரவு இருக்கும் என்று கூறியுள்ள ஹாரி ப்ரூக், சத்தமும் அதிகமாக இருக்கும் என்பதை அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்க உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதனால் 2022ல் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

T20 World Cup 2026

இந்த நிலையில் இந்திய அணியை எதிர்கொள்வது தொடர்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பேசுகையில், இந்திய அணியை எதிர்த்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே எங்கள் அணியில் உள்ள சிலரிடம் ஏதோ ஒரு கட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரும் என்று பேசி இருந்தேன். நிச்சயமாக இது மிகப்பெரிய தருணமாக இருக்கப் போகிறது.

இரு அணிகள் மீது அழுத்தம் இருக்கலாம். நிச்சயமாக இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கும். எங்களுக்கு அதிகமான ஆதர்வு இருக்கும் என்று நம்பவில்லை. இதனால் சத்தமும் அதிகமாக இருக்கும். அதனால் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம் என்று நம்புகிறேன். பட்லரின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பேச வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வீரர்களில் அவர் மிகச்சிறந்த வீரர். அவர் ஃபார்முக்கு வருவதை உணர்கிறோம். சரியான நேரத்தில் சில வீரர்கள் ஃபார்முக்கு வந்துள்ளார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் சிறப்பாக ஆடி வருகிறார். டாப் 7 பேட்ஸ்மேன்களில் பவரான ஹிட்டர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வான்கடே மைதானம் இந்திய அணிக்கு எப்போதும் அதிக வெற்றிகளை கொடுத்துள்ளது. அதேபோல் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால், எந்த அணியின் பவுலர்கள் சிறப்பாக விளையாடுகிறர்களோ, அந்த அணி வெல்லும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து அணி வலிமையாக இருப்பதால், ரசிகர்கள் கூடுதல் அச்சத்துடன் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+