ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தும்.. என்னோட அணியை வெற்றிபெற வைக்க முடியலையே.. கண்ணீரிவிட்டு அழுத குர்பாஸ்!
அகமதாபாத்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி நூலிழையில் தோல்வி அடைந்த பின், அந்த அணியின் நட்சத்திர வீரர் குர்பாஸ் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் குர்பாஸ்க்கு இந்திய ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, 19 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.

அப்போது நூர் அஹ்மத் சிக்ஸ் விளாசி, கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அப்போது ஃபரூக்கி 2வது ரன் எடுத்த போது ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் ஆட்டம் டையில் முடிவடைந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 17 ரன்களை குவித்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா அணியும் 17 ரன்களை சேர்க்க, மீண்டும் 2வது சூப்பர் ஓவர் நடந்தது.
இந்த முறையில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஸ்டப்ஸ் - மில்லர் கூட்டணியின் அதிரடியில் அந்த அணி 23 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியும் ஃபரூக்கி இருக்கும் போது, ஏன் அஸ்மத்துல்லா ஓமர்சாய் வசம் பந்தை கொடுத்தது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. இதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக முகமது நபி - அஸ்மத் கூட்டணி களமிறங்கியது. முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை.
2வது பந்தில் முகமது நபி ஆட்டமிழக்க, குர்பாஸ் களம் புகுந்தார். அவர் வந்து தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசி, கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது. ஆனால் குர்பாஸ் ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றியை பெற்றது. ஏற்கனவே சேஸிங்கின் போது குர்பாஸ், 42 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 84 ரன்களை விளாசினார்.
இந்த தோல்வியால் ஆஃப்கானிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்று கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பேட்டிங்கிற்கு பின் ஓய்வறைக்கு வந்த குர்பாஸ் திடீரென கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் குர்பாஸ்ஸை சக வீரர்கள் சமாதானப்படுத்த தொடங்கினர். இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் குர்பாஸ்க்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications