புத்துயிர் பெற்ற திலக், அபிஷேக் சர்மா.. காரணமே சஞ்சு சாம்சன் தான்.. இனியாவது கம்பீருக்கு புரியுமா?
சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறந்த கம்பேக்கை கொடுத்துள்ளனர். இதற்கு சஞ்சு சாம்சனின் தொடக்கம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்துள்ளார்.

சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்களையும், திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களையும், இஷான் கிஷன் 24 பந்துகளில் 38 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ரன்களையும், சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்களையும் விளாசி இருக்கின்றனர்.
இந்திய அணி மொத்தமாக 17 சிக்ஸ், 17 பவுண்டரிகளையும் விளாசி இருக்கிறது. கடந்த 5 போட்டிகளாக இந்திய அணியின் டாப் ஆர்டர் ஆடி வந்த மோசமான ஆட்டத்திற்கு பின், இந்தப் போட்டி சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. அதற்கு சஞ்சு சாம்சன் கொடுத்த சிறந்த தொடக்கம் முக்கிய காரணம். அவர் குறைந்த ரன்களை அடித்திருந்தாலும், அபிஷேக் சர்மாவை பாதுகாத்துவிட்டு சென்றார்.
முதல் ஓவர் முதலே அபிஷேக் சர்மாவை அவ்வளவு எளிதாக சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக்கில் வரவிடவில்லை. அபிஷேக் சர்மா போதிய நேரம் களத்தில் இருக்க வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. அதற்கேற்ப சஞ்சு சாம்சன் கொஞ்சம் கூட அசராமல் சிக்சர், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். அதேபோல் நம்பர் 3ல் பேட்டிங் இறங்கி வந்த திலக் வர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால் டாப் 3 பேட்டிங் வரிசையில் இருந்து திலக் வர்மாவை கீழே கொண்டு சென்ற பின், அவரின் ஆட்டம் வேறு மாதிரி மாறி இருக்கிறது. இதனால் வரும் போட்டிகளில் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக தொடர்ந்து கம்பீர் பயன்படுத்த வேண்டும் என்ற குரல் அதிகரித்துள்ளது. இதனை கம்பீர் ஏற்பாரா என்பதே ரசிகர்களின் கேள்வியாகவும் இருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications