தியானத்தை தொடங்குங்க.. பிளான் பியை கையில் எடுத்த ரோஹித் சர்மா.. வேலையை தொடங்கிய கோலி - ராகுல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி மிக சிறப்பாக பீல்டிங், பவுலிங் செய்து வருகிறது . இந்திய அணிக்கு இதனால் பிரஷர் அதிகரித்துள்ள நிலையில் இந்திய அணி தற்போது பிளான் பியை கையில் எடுத்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை மேட்ச் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணி அட்டாக் மோடில் ஆடிக்கொடு இருக்கிறது. இந்திய அணி வேகமாக இன்று ஆட்டத்தை தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

Team India starts Plan B against Australia in the 2023 World Cup Finals

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார்.

பிளான் பி என்ன?; இதையடுத்து தற்போது பிளான் பியை கையில் எடுத்துள்ளது இந்திய அணி. அதன்படி பிளான் ஏ படி ரோஹித் வேகமாக ஆட வேண்டும். கில், ஷ்ரேயாஸ் கொஞ்சம் பொறுமையாக ஆட வேண்டும்., கோலி ஆங்கர் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதுதான் பிளான் ஏ.

( இரவோடு இரவாக நடந்த சம்பவம்.. ஆஸ்திரேலியா கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. இந்தியாவிற்கு )

ஆனால் பிளான் ஏவில் கோலி மட்டுமே இருக்கிறார். 47 ரன்களில் ரோஹித் சர்மா அவுட் ஆகி விட்டார், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கில், ஷ்ரேயாஸ் அவுட் ஆகிவிட்டனர். இதனால் பிளான் பியை இந்திய அணி கையில் எடுத்துள்ளது. இது இந்த உலகக் கோப்பையில் தொடக்கத்தில் முதல் போட்டியில் செய்த பிளான் ஆகும்.

சென்னையில் நடந்த ஆட்டத்தில் பிளான் பி யை இந்தியா கையில் எடுத்தது. அதாவது பவுண்டரி, சிக்ஸ் அடிக்காமல் தியானம் போல ஆடுவது. சிங்கிள்ஸ் மட்டும் எடுத்து மிக மிக நிதானமாக தியானம் போல ஆடுவதுதான் இந்திய அணியின் பிளான் பி. அதை தற்போது கோலி - கே எல் கையில் எடுத்துள்ளனர் . இந்தியா தற்போது 23 ஓவர்களுக்கு 125 ரன்களை 3 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது.

60 பந்துகளாக விக்கெட் செல்லவில்லை. அதேபோல் 6 பந்துகளாக பவுண்டரியும் செல்லவில்லை. கோலி மிக நிதானமாக 45 ரன்களை 49 ரன்களில் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறார். அதேபோல் ராகுலும் 49 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறார்.

Team India starts Plan B against Australia in the 2023 World Cup Finals

இந்திய அணி எப்படி?: இந்திய அணி மாற்றம் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே எல் ராகுல் (கீப்பர்) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரிட் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்று இந்திய அணியில் உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளை விட வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி டீமை மாற்றவே இல்லை.

இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+