ஜெய் ஸ்ரீராம்.. டிரெஸ்ஸிங் ரூம்ல கூட கொடுமை பண்ணாங்க! பாகிஸ்தானில் ஆடிய "இந்து" கிரிக்கெட்டர் ஷாக்
சென்னை: பாகிஸ்தான் அணிக்காக ஆடிய இந்து மதத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டானிஷ் கனேரியா தான் எதிர்கொண்ட பிரச்சனைகளை.. ஜெய் ஸ்ரீராம் விவகாரத்தில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஆடிய இந்து மதத்தை சேர்ந்த வீரர்கள் மிக குறைவு. இதில் பாகிஸ்தான் அணிக்காக ஆடிய இரண்டாவது இந்து வீரர்தான் டானிஷ் கனேரியா. மைதானத்தில் மோசமாக நடந்து கொள்வது, இந்திய வீரர்களை கடுமையாக கிண்டல் செய்வது, மேட்ச் ஸ்பிரிட் இல்லாமல் ஆடுவது என்று பல விஷயங்களுக்கு கனேரியா "கெட்ட" பெயர் போனவர்.

டானிஷ் கனேரியா: அதோடு இல்லாமல் தோனி, சச்சின் போன்றவர்களை கூட வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார் டானிஷ் கனேரியா. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது டானிஷ் கனேரியா பாகிஸ்தான் அணியில் இருந்த போது தான் மத ரீதியாக எதிர்கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டு உள்ளார். ஜெய் ஸ்ரீராம் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அவர் இதை குறிப்பிட்டு உள்ளார். அதன்படி இலங்கை அணியின் தில்ஷானிடம் பாகிஸ்தான் வீரர் அஹமது ஷேஷாத் மத ரீதியாக நடந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் ஷேஷாத்.. தில்ஷனிடம்.. நீ முஸ்லீம் இல்லை. நீ முஸ்லீமாக மாறும். நீ என்ன செய்தாலும்.. நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வாய் என்று கூறி உள்ளார். அப்போது இந்த சம்பவம் பெரிய வைரலாகி கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
( அந்த குரல் கேட்கலையே.. அசிங்கப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் அணி! தோனி சொன்ன அந்த வார்த்தை.. டிரெண்டாகுதே)
இந்த வீடியோவைத்தான் டானிஷ் கனேரியா பகிர்ந்து உள்ளார். அதில், டிரஸ்ஸிங் ரூமோ, விளையாட்டு மைதானமோ, சாப்பாட்டு மேசையோ, இந்த கொடுமை எனக்கு தினமும் நடந்தது என்று கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தான் வீரர்கள் தன்னை மதமாற்ற பிரஷர் கொடுத்ததாக கூறியுள்ளார். அவரின் கமெண்ட் செக்சனில்.. இந்தியர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதுதான் பாகிஸ்தான் அணியின் உண்மையான முகம் என்று குரல் கொடுத்துள்ளனர்.
என்ன நடந்தது?: கடந்த சனிக்கிழமை இந்தியா பாகிஸ்தான் மேட்சில் முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியன் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக, கிண்டல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. பின்வரும் சம்பவங்கள் நேற்று மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.
முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் விதமாக, அவர்களை வெறுப்பேற்றும் விதமாக அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications