Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதனைலாம் ஒரு மேட்டரே இல்ல.. தோனிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடக்குது.. விராட் கோலி சோகம்!

Subscribe to Oneindia Tamil

வதோதரா: தற்போதைய சூழலில் சாதனைகள் படைப்பதை பற்றிய சிந்தனையே எனக்குள் இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். அதேபோல் நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் அதிகளவில் கோஷம் எழுப்புவதை இதற்கு முன் தோனிக்கு நடந்திருக்கிறது என்று கூறிய விராட் கோலி, அது அவுட்டாகி பெவிலியன் செல்லும் பேட்ஸ்மேனுக்கு சோகம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 301 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி 49 ஓவர்களில் எட்டி வென்றது. சிறப்பாக ஆடிய 93 ரன்களை விளாசிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

Virat Kohli

இதன்பின் விராட் கோலி பேசுகையில், இந்த விருதை எத்தனையாவது முறையாக பெறுகிறேன் என்பது நினைவில் இல்லை. எப்போது நான் வெல்லும் கோப்பைகளை கூர்கயானில் உள்ள அம்மாவுக்கு அனுப்பிவிடுவேன். எனது வெற்றிக் கோப்பைகளை சேர்ப்பது அம்மாவுக்கு பிடிக்கும். என்னுடைய பயணத்தை திரும்பி பார்க்கும் போது, நிச்சயமாக ஒரு கனவு நனவானது என்றே சொல்ல வேண்டும்.

என்னுடைய திறமைகளை பற்றி நன்றாக அறிந்திருக்கிறேன். அதனால் இன்றைய இடத்தை அடைய வேண்டும் என்றால், கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும் தெரிந்தே வைத்திருந்தென். நான் கேட்டதை விடவும் அதிகமாக கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். எனது பயணத்தை நினைத்து எனக்கே பெருமையாக உள்ளது.

இப்போதெல்லாம் என்னுடைய சாதனைகளை பற்றிய சிந்தனையே இல்லை. முதல் பேட்டிங் ஆடி இருந்தால், நான் இன்னும் அதிரடியாக விளையாட முயற்சித்திருப்பேன். ஆனால் சேஸிங்கின் போது இலக்கு கண்களுக்கு தெரிந்துவிட்ட போது, சூழலுக்கு ஏற்ப விளையாடுவதே சரியான விஷயம். இன்னும் சில பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்று முயற்சித்தேன். என்னுடைய அணி எளிதாக வெல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

தற்போது ஆட்டத்தில் சூழல் கடினமாக இருந்தால், கவுன்டர் அட்டாக் செய்ய முயற்சிப்பேன். எந்த பந்தில் நம் விக்கெட் விழும் என்று தெரியாது. எந்த பந்தில் நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்றும் தெரியாது. அதனால் டிஃபென்சிவ்வாக விளையாடி எந்த பிரயோஜனமும் இல்லை. அதேபோல் அட்டாக்கிங் ஆட்டம் என்று இஷ்டத்திற்கும் விளையாட கூடாது. ரோகித் சர்மா அவுட்டான போது, முதல் 20 பந்துகளில் அட்டாக் செய்தேன்.

நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் அதிகமாக கோஷம் எழுப்புகிறார்கள். அதனை அறிந்தே இருக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அது எனக்கு சோகம் அளிக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பாக தோனிக்கு அப்படி நிகழ்ந்தது. ஒரு வீரர் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது, ரசிகர்கள் எனக்காக கோஷம் எழுப்புவது சரியானதல்ல.

ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆட்டத்தில் நான் கவனம் வைக்க வேண்டும். மக்களை மகிழ்ச்சி அடைய வைப்பது எனக்கு தொழிலாக அமைந்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்கிறேன். என் ஆட்டத்தால் மக்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தே எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+