Virat Kohli: விராட் கோலிக்கு வாழ்த்து சொல்லாத கங்குலி.. இவ்வளவு வன்மம் ஆகாது தாதா.. காரணம் என்ன?
மும்பை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி தயாராகி வந்த நிலையில், திடீரென விராட் கோலி ஓய்வை அறிவித்து வெளியேறி இருக்கிறார். இதற்கு பிசிசிஐ நிர்வாகத்துடனான மோதலே காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி நேற்று முன்தினம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமகால கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓய்வுக்கு என்ன காரணம்?
ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, மொத்தமாக விலகி சென்றுள்ளார். இனி வரும் காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். இதனிடையே விராட் கோலியின் திடீர் ஓய்வு முடிவுக்கு என்ன காரணம் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் நடந்து வருகிறது.
வாழ்த்தாத கங்குலி
அதேபோல் விராட் கோலிக்கு, பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ஒரு வாழ்த்து பதிவை கூட எழுதவில்லை. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்த போது, பிசிசிஐ தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. அந்த நேரத்தில் விராட் கோலி - சவுரவ் கங்குலி இடையில் மிகப்பெரிய மோதல் நிலவி வந்தது.
கேப்டன்சி சர்ச்சை
அதற்கு தொடக்கப் புள்ளியாக பயிற்சியாளர் அனில் கும்ப்ளே உடன் விராட் கோலி மோதலில் ஈடுபட்டதே காரணமாக அமைந்தது. தொடர்ந்து கேப்டனாக விராட் கோலி ஐசிசி தொடர்களில் அடைந்த தோல்விகளை காரணமாக வைத்து, அவரை ஒயிட் பால் கேப்டன்சியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்தது. இதன்பின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா கொண்டு வரப்பட்டார்.
நட்பு இல்லை
இதனால் கடுப்பான விராட் கோலி, டெஸ்ட் கேப்டன்சியையும் தூக்கி எறிந்தார். சாதாரண வீரராகவே இந்திய அணியில் விளையாடி வந்தார். விராட் கோலி தலைமையில் டெஸ்டில் நம்பர் 1 அணியாக வலம் வந்த இந்தியா, ரோஹித் சர்மா தலைமையில் சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்தது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி வெளியேறிய போது, இவர்களுக்குள் நல்ல உறவில் இல்லை.
பிசிசிஐ அரசியல்
பொது இடங்களில் கங்குலி, விராட் கோலியை புகழ்ந்து பேசினாலும், இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு தொடர்ந்து வந்தது. தற்போது கூட ரோஹித் சர்மா ஓய்வுக்கு சூப்பர் கேப்டன் என்று வாழ்த்தியுள்ள கங்குலி, விராட் கோலியின் ஓய்வுக்கு ஒரு சிறிய வாழ்த்தை கூட பதிவிடவில்லை. இதனால் களத்திற்கு வெளியில் விராட் கோலி மிகப்பெரிய அரசியலை எதிர்கொண்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications