2010 சீசன் நியாபகம் இருக்கா? ”சிஎஸ்கே ஃபேன்சுக்கு இனி ட்ரீட் தான்” காசி விஸ்வநாதன் சொல்றதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அணி இந்த சீசனில் நன்றாக விளையாடவில்லை. அணியின் இதுபோன்ற ஆட்டங்கள் உங்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்து இருக்கலாம். எனினும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள். கடந்த 2010 ஆண்டில் கூட சென்னை அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்று இருந்தது. ஆனால் அந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. எனவே இந்த ஆண்டும் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக சென்னை அணியின் சி இ ஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சென்னை அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. ஆர்சிபி, குஜராத், பஞ்சாப் என மற்ற அணிகள் அதிரடியாக விளையாடி வரும் நிலையில் சென்னை அணி மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கிறது. மும்பை அணியும் தொடக்கத்தில் மோசமாக ஆடிய நிலையில் தற்போது 3 வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலிலும் முன்னேறியுள்ளது.

we-will-come-back-like-the-2010-ipl-season-says-chennai-super-kings-ceo-kasi-viswanathan

2010 ம் ஆண்டு நியாபகம் இருக்கிறதா?

மற்ற ரசிகர்கள் தான் சென்னை அணியை கலாய்த்து வந்த நிலையில் தற்போது சென்னை ரசிகர்களே கலாய்க்கும் அளவுக்கு வீரர்கள் மோசமாக விளையாடி வருகிறார்கள். அதிக மரம் நடுகிறார்கள் என்ற விமர்சனமும் வைக்கப்படும் நிலையில், "கடந்த 2010 ஆம் ஆண்டு நியாபகம் இருக்கிறதா? அப்படித்தான் இப்போதும் நடக்க வாய்ப்பு இருக்கிறது" என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஐபிஎல் 18வது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது. சிஎஸ்கே ரசிகர்களே போட்டியை பார்க்க முடியாத அளவிற்கு ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இவ்வளவு மோசமாக சென்னை அணி விளையாடி நாங்கள் பார்க்கவே இல்லை என்று கூறும் அளவுக்கு சென்னை அணியின் பேட்டிங் இருந்து வருகிறது.

8 போட்டியில் 6ல் தோல்வி

குட்டி தல என்று அழைக்கப்படும் ரெய்னா இருக்கும்போது எல்லாம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்து இருக்கும். ஆனால் தற்போது நடப்பு சீசனில் ஒரு முறை கூட பவர் பிளேவில் 70 ரன்களை கூட தாண்டவில்லை. மற்ற அணிகள் எல்லாம் நாலாபுறமும் பவுண்டரிகளாக நொறுக்கும் நிலையில் சிஎஸ்கே பேட்டர்கள் மட்டும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மொத்தம் இதுவரை 8 மேட்சுகளில் விளையாடிய சிஎஸ்கே அணி ருத்துராஜ் தலைமையில் முதல் மேட்சில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்பிறகு தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. 6 போட்டிகளுக்கு ருத்துராஜ் தலைமை தாங்கிய நிலையில் முதல் மேட்சில் மட்டும் வெற்றி பெற்று மற்ற அனைத்து (5) போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருந்தது. குறிப்பாக சென்னை கிரவுண்டில் விளையாடிய போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்தது.

தோனி கேப்டன் ஆனதும் வெற்றி

மேலும் கான்வே, திரிப்பாட்டி, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ருத்துராஜ் என யாருமே பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. பவுலிங்கிளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதிய மண்ணின் மைந்தன் அஸ்வினும் பெரிதாக விக்கெட் எடுக்கவில்லை. இதற்கிடையே ருத்துராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தல தோனி களம் கண்டார்.

தோனி தலைமைக்கு பிறகு சென்னை அணி எழுச்சி பெறும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். மேலும் ஆடும் லெவனிலும் சின்ன மாற்றத்தை கொண்டு வந்தார். இதனால் சொன்னது போலயே லக்னோ அணியை பந்தாடி சிஎஸ்கே அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றது. இதனால் மீண்டும் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து தான் மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே எதிர்கொண்டது.

மும்பை அணியுடன் தோல்வி

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை மைதானத்தில் வைத்து வெற்றி பெற்று இருந்ததால், பதிலடி கொடுக்க மும்பை அணி தயாராக இருந்தது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், சென்னை அணி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் மிகுந்து ஆர்வலோடு இருந்தனர். ஆனால் தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா மீண்டும் சொதப்பினார். பேட்டிங்க் கிரவுண்டான வான்கடேவில் கூட சென்னை அணியால் ரன்களை திரட்ட முடியவில்லை.

20 ஓவரில் வெறும் 177 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. இந்த மேட்ச்சிலும் பவர் பிளேவில் சென்னை அணி 48 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதில், புதிதாக களம் இறங்கிய 17 வயதான இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள்(4 போர்ஸ், 2 சிக்ஸ்) எடுத்திருந்தார். அப்படி இருந்தும் 6 ஓவரில் சென்னை அணி 48 ரன்களே எடுத்து இருந்தது. பின்னர் வந்த வீரர்களும் பெரிய அளவில் விளையாடவில்லை. ஜடேஜே, ஷிவம் தூபே இருவரும் பிஃப்டி அடித்து இருந்தாலும், இடையில் 29 பந்துகளுக்கு ஒரு பவுண்டரிகள் கூட அடிக்காமல் வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர்.

பிளே ஆப் செல்லாது என்றார் ராயுடு

அதற்கு பின்பு தான் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த 30 பந்துகளில் கூடுதலாக ஒரு 30 ரன்கள் சேர்த்திருந்தாலும், பீல்டிங்கில் கேட்ச்சுகளை விடாமல் இருந்திருந்தாலும், நூர் அகம்மதுவுக்கு ஓவர் கொடுத்துவிட்டு அஸ்வினை தவிர்த்து இருந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று பலரும் கூறி வருகிறார்கள். மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2இல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இதனால் இந்த சீசனில் சிஎஸ்கேவால் பிளே ஆப் செல்ல முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் சிஎஸ்கே வீரரான அம்பத்தி ராயுடு கூட இனி சென்னை அணி பிளே ஆப் செல்லும் என்று நான் நினைக்கவில்லை. தோனியும் கிட்டத்தட்ட அப்படித்தான் கூறியிருக்கிறார். இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம். முடியவில்லை என்றால் அடுத்த சீசனுக்கு வீரர்களை தயார் செய்வோம் என்று கூறியதாக அம்பத்தி ராயுடு கூறினார்.

காசி விஸ்வநாதன் நம்பிக்கை

இந்த நிலையில் தான் சென்னை அணியின் சி இ ஓ காசி விஸ்வநாதன் கடந்த 2010 ஆண்டு போலவே இப்போதும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு சாம்பியன்ஸ் கோப்பையையும் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சென்னை அணி இந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன்.

சென்னை அணியின் இதுபோன்ற ஆட்டங்கள் உங்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கலாம். ஆனால் இனி வரும் போட்டிகள் கண்டிப்பாக சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள். கண்டிப்பாக இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த 2010 ஆண்டு ஐபிஎல் சீசனில் கூட சென்னை அணி இப்படித்தான் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து இருந்தது. ஆனால் கடைசியில் சென்னை அணி தான் கோப்பையை வென்றது.

2010 ஆம் ஆண்டு நடந்தது என்ன?

எனவே அதேபோன்று இந்த நடப்பு சீசனிலும் சென்னை அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை அணி கடந்த 2010 ஆம் ஆண்டு சீசனிலும் இதேபோன்று 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து இருந்தது. மொத்தம் உள்ள 14 போட்டிகளில் சென்னை அணி அந்த சீசனில் 7 போட்டிகள் தோல்வியும், 7 போட்டிகளில் வெற்றியும் பெற்று 14 புள்ளிகள் பெற்று இருந்தது. ஆனால் அப்போது ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

we-will-come-back-like-the-2010-ipl-season-says-chennai-super-kings-ceo-kasi-viswanathan

மும்பை அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டெக்கான் சார்ஜஸ் ஹைதராபாத் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை அணி 14 புள்ளிகள் பெற்று 3 ஆம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 புள்ளிகளுடன் 4 ஆம் இடமும் பிடித்தன. டெல்லி, கொல்கத்தா அணிகளும் 14 புள்ளிகள் பெற்று இருந்தன. மொத்தம் 4 டீம்கள் 14 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் 3ம் இடத்தை சென்னையும், 4 ம் இடத்தை பெங்களூரும் பெற்று பிளே ஆப் சென்றது.

பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கிறதா?

இதில் மும்பை இந்தியன்சும், சென்னை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இதை மனதில் வைத்து தான் காசி விஸ்வநாதன் இந்த தகவலை கூறியிருக்கிறார். நடப்பு ஐபிஎஸ் சீசனிலும் பார்க்கப்போனால், 8 மேட்சில் 6இல் தோல்வியடந்த சென்னை அணி மீதமுள்ள 6 போட்டிகளில் 6லும் வெற்றி பெற்றால் ஓவரால் 8 வெற்றி பெற்றுவிடும்.

16 புள்ளிகள் சென்னை அணிக்கு கிடைத்துவிடும். ரன் ரேட்டும் அதிகமாக வைக்கும் பட்சத்தில் சென்னை அணிக்கு பிளே ஆப் மற்றும் கோப்பையை வெல்லும் சூழல் இருக்கிறது. அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் இந்த ஆண்டும் சென்னை அணி கோப்பையை வெல்லும். அடுத்த இரண்டு போட்டிகள் சென்னை அணி அதிரடியை காட்டினால் கூட போதும், பெரிய அளவில் சேசிங் செய்து வெற்றி பெற்றாலும் சென்னை அணிக்கு புது தெம்பு கிடைக்கும். ரசிகர்களும் உற்சாகமடைவார்கள். எனவே இனி வரும் போட்டிகளில் சென்னை அணி ஃபேன்சுகளுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் கம் பேக் கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+