கதற வைத்த மூவர் கூட்டணி.. இலங்கையை புரட்டி அடித்த இந்தியா.. வெற்றிக்கு பின் உள்ள 4 ரகசியங்கள்!
சென்னை: இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின் 4 முக்கியமான காரணங்கள் உள்ளன.
இந்தியா இலங்கை இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடினர்.

இன்னொரு பக்கம் இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான்ஆடினர்மதுஷங்க ஆகியோர் ஆடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்து ஆடி .
இந்தியா பேட்டிங்: கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக ஆடிய ரோஹித்சர்மா வெறும் 2 பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து இறங்கிய கோலி, ரோஹித் சர்மா இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார்.
முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் தேவையில்லாமல் அப்பர் கட் அடிக்க முயன்று தில்ஷன் பந்தில் அவுட் ஆனார். இன்னொரு பக்கம் கோலி அதிரடியாக ஆடி இதேபோல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 94 பந்துகள் பிடித்த அவர் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தில்ஷன் பந்தில் இவரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இன்று போட்டியில் பார்மிற்கு திரும்பினார் . 56 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். முக்கியமாக இன்று ஷார்ட் பந்துகளில் அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் ஜடேஜா 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார். இதனால் 300 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணி 357-8 ரன்கள் எடுத்தது.
இலங்கை தோல்வி: இதன்பின் இலங்கை அணி வந்த வேகத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. தொடக்க வீரர்கள் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். பும்ரா, சிராஜ் ஓவர்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
அதன்பின் சதீர சமரவிக்ரம, மீண்டும் டக் அவுட் ஆக, குசல் மெண்டிஸ் 1 ரன்னுக்கு அவுட் ஆனார். அதை தொடர்ந்து சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார். டாப் ஆர்டரில் 5 பேரில் 3 பேரின் விக்கெட்டை சிராஜ்தான் எடுத்தார். அவரின் விக்கெட் பவுலிங் காரணமாகவே இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது. ஆனால் அதன்பின் சிராஜ் மட்டுமின்றி ஷமியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக எடுத்தார்.
கடந்த 2 போட்டிகளில் 5 விக்கெட் ஹவுல் 1 , 4 விக்கெட் ஹவுல் 1 எடுத்தவர் இன்று மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். மிடில் ஆர்டரில் ஆஞ்சலோ மேத்யூஸ் மட்டும் 12 ரன்கள் எடுக்க.. மற்ற வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழக்க இந்தியா எளிதாக இன்று வென்றது.
வெற்றிக்கு காரணம்:
காரணம்1 - நேற்று சமி விக்கெட் எடுத்தது பலரும் எதிர்பார்த்ததே. பிட்ச் அவருக்கு சாதகமாக இருந்தது. அதே சமயம் சிராஜ் பந்தை அதிகம் ஸ்விங் செய்தது எதிர்பார்க்காமல் வந்தது. கிட்டத்தட்ட எல்லா பந்திலும் அவர் ஸ்டம்பை குறி வைத்து விக்கெட் எடுத்தார். அவரின் 3 விக்கெட்டும் சர்ப்ரைஸ் விக்கெட்தான். சமி - சிராஜ் - பும்ரா மூவர் கூட்டணிதான் நேற்று இலங்கை அணியை திணற அடித்தது.

காரணம் 2 - பாஸ்ட் பவுலிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும்.. இன்னொரு பக்கம் குல்தீப் - ஜடேஜா பிட்ச் எப்படி இருந்தாலும் விக்கெட் எடுத்துவிடுகின்றனர். இரண்டு பேரின் ஸ்பின் பவுலிங்கும் எதிரணிக்கு சவாலாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் பிரேக் கொடுப்பதே இவர்கள்தான்.
காரணம் 3- முக்கிய காரணம் ரோஹித் சர்மாவின் வியூகம். இரண்டாம் பவுலிங் செய்தாலும், பனி காரணமாக பந்து வழுக்கினாலும் ஸ்லோ பிட்சை ரோஹித் சர்மா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவர் ஓவர்களை ரொட்டேட் செய்த விதம், பீல்டிங் நிறுத்திய விதம் சிறப்பாக இருந்தது வெற்றிக்கு முக்கிய காரணம்.
காரணம் 4 - பார்ட்னர்ஷிப் - இந்திய அணியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைந்து விடுகிறது. ஒன்று ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டரில் பார்ட்னர் ஷிப் அமைகிறது. நேற்று கில் - கோலி பார்ட்னர்ஷிப், ஷ்ரேயாஸ் ஜடேஜா பார்ட்னர்ஷிப் ஆகியவைதான் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications