Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூட்சமமே இதுதான்.. இந்தியாவின் தொடர் வெற்றியின் சீக்ரெட் என்ன? வங்கதேசத்தை வீழ்த்த 5 முக்கிய காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா வங்கதேசம் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 விஷயங்கள் மிக முக்கியமான காரணமாக அமைந்தன.

2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வருகிறது. வரிசையாக இதுவரை 4 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது.

What are the 5 reasons behind the victory of team India against Bangladesh in world cup 2023?

அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றது. இந்த நிலையில்தான் நேற்று வங்கதேசத்திற்கு எதிராக போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது.

அணி விவரம்: ஆடும் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்றும் அணியில் அஸ்வின் எடுக்கப்படவில்லை. வங்கதேச அணியில், லிட்டன் தாஸ், டான்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேட்ச்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா வெற்றி: இதில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் நிதானமாக ஆடி கொஞ்சம் கொஞ்சமாக பார்ட்னர்ஷிப் அமைத்தது.. விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக நிதானமாக வங்கதேசம் அணி ஆடிக்கொண்டு இருந்தது

தொடக்கவீரர் டான்சிம் ஹாசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் விக்கெட்டும் போன பின் வங்கதேசத்தின் மிடில் ஆர்டர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் முஸ்பிக்கர் ரஹீம் 38, முகமதுல்லா 46 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் வங்கதேசம் அணி 256 ரன்கள் எடுத்தது,

பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப், ஷரத்துல் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் தொடக்கத்தில் இருந்தே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினார்கள். ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையை பொழிந்தார். 40 பந்தில் ரோஹித் சர்மா 2 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 48 ரன்கள் எடுத்தார். அதேபோல் 55 பந்தில் கில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று 53 ரன்கள் எடுத்தார்.

கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த கோலி.. கடைசி பந்து வரை சென்று சிக்ஸ் அடித்து சதம் அடித்தார்., இதனால் இந்தியா எளிதாக நேற்று வென்றது.

இந்தியா வெற்றிக்கு காரணமான விஷயங்கள்;

காரணம் 1: இந்திய அணியின் பவுலிங் ரொட்டேஷன் சிறப்பாக இருந்தது. ரோஹித் கேப்டன்சி மிக சிறப்பாக இருந்தது. பவுலிங் ரொட்டேஷன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக இருந்தது. வங்கதேச அணியை திணற வைத்ததே இந்த பவுலிங் ரொட்டேஷன்தான். அதேபோல் ரோஹித் சரியான நேரத்தில் துல்லியமாக பீல்டிங்கை மாற்றியது அணியின் வெற்றிக்கு சாதகமாக இருந்தது.

காரணம் 2: இந்தியாவின் பவுலிங். முக்கியமாக குல்தீப் விக்கெட்டை தொடங்கி வைத்தது.. துல்லியமான ஸ்லோ பால், யார்க்கர் மூலம் பும்ரா போட்ட பிரஷர்.. இன்னொரு பக்கம்ஜடேஜாவின் சுழல் மூன்றும் வங்கதேசம் அணிக்கு கடுமையான பிரஷரை கொடுத்தது. இதை எதிர்கொள்ள முடியாமல் போனதே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

What are the 5 reasons behind the victory of team India against Bangladesh in world cup 2023?

காரணம் 3: இந்திய அணியின் பேட்டிங் . ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே சுதாரித்து 48 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். கில் இன்னொரு பக்கம் அரைசதம் அடித்தார். முக்கியமாக வங்கதேசம் பவுலர்கள் மீதான அச்சம் எதுவும் இன்றி அவர்களின் பவுலிங்கை இந்திய அணி காலி செய்துள்ளது.

காரணம் 4: நேற்று டாப் ஆர்டர் விக்கெட் விழுந்த பின் அதிரடியாக ஆடி மேட்சை முடித்து வெற்றிபெற நினைத்தால் இந்தியாவின் விக்கெட்டுகள் மேலும் விழும் வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் கவிழ்ந்தது போல கவிழாமல் கோலி கடைசி வரை நின்று ஆடியது அணியின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது.

காரணம் 5: வங்கதேசம் வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் தொடர்ந்து இந்தியா விக்கெட் எடுத்தது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் இதேதான் நடந்தது. இந்தியாவின் தொடர் வெற்றிக்கு பின் உள்ள முக்கிய சூட்சமமே இதுதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+