நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்..இந்தியா லிஃப்ட் தி வேர்ல்ட் கப்..! நச்சுனு நாலே நாலு காரணங்கள்..!
சென்னை: இந்தியாவின் பல ஆண்டு உலகக் கோப்பை தாகம் தீர்ந்திருக்கிறது ரோகித் தலைமையிலான இந்திய படை டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா கோப்பையை கைப்பற்ற முக்கியமாக இருந்த நான்கே நான்கு காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
இங்கிலாந்தில் பிறந்த கிரிக்கெட் அதன்பிறகு உலகம் முழுவதும் பரவத் தொடங்கினாலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. 1980களுக்கு பிறகு பல நாடுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கின.

குறிப்பாக 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு பிறகாக பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என பல ஆசிய அணிகளும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.
டெஸ்ட் கிரிக்கெட் 50 ஓவர் கிரிக்கெட் என தற்போது டி20 வரை கிரிக்கெட் பரிணாமித்து இருக்கிறது. 2007 டி20 உலக கோப்பை 2011 50 ஓவர் உலகக் கோப்பையை தோனி வென்றதற்கு பிறகு ஐசிசி தொடர்களை இந்திய அணி 'சோக்கர்ஸ்' அணியாக பார்க்கப்பட்டது. அதாவது அரை இறுதி போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து கோப்பையை கைப்பற்றாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த டி-20 உலகக் கோப்பை இறுதி போட்டி முன்னதாக தோல்வியையே காணாத தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி. இதை அடுத்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இந்திய அணியினரை கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் ராகுல் டிராவிட்டின் பயிற்சி, மறுபக்கம் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, இன்னொரு பக்கம் விராட் கோலி, பாண்ட்யா, சூரியகுமார் யாதவ் என வெற்றிக்காக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாற்றுக்கருத்து இருக்கலாம் ஆனால் களம் என வரும்போது கூட்டு முயற்சியே அணியை வெற்றிக்கு எடுத்துச் செல்லும். ஆனாலும் தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடு ஒரு நொடியில் ஆட்டத்தையே மாற்றிவிடும் போக்கு கொண்டது. அப்படி நான்கு சம்பவங்கள் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட வெற்றி வரை சென்ற தென்னாப்பிரிக்கா தோல்வி அடைய இந்தியாவின் நான்கு காரணங்கள் மிக முக்கிய பங்காற்றி இருக்கின்றன அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
மேற்கிந்திய தீவுகள் நாட்டிலுள்ள பார்பர்டஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில் டாஸ் பெரிய அளவில் தாக்கம் செலுத்தவில்லை.. காரணம் பகல் நேரத்தில் போட்டி நடைபெற்றதால் பனியின் தாக்கம் முற்றிலுமாக இருக்காது என்பதை உணர்ந்தே கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் 170 முதல் 180 ரன்கள் அடித்தாலே போதும் என்ற நிலையில் அதனை இந்திய அணி வெற்றிகரமாக செய்து முடித்தது.
கடந்த ஆட்டங்களில் கை கொடுத்த ரோகித் உள்ளிட்ட ஒரு சிலர் சொதப்ப, கடந்த ஆட்டங்களில் சொதப்பிய விராட் கோலி அக்ஷர் பட்டேலும் கைகொடுக்க இந்தியா கௌரவமான ஸ்கோரை எட்டியது. போக போக ஆடுகளம் மெதுவாக மாற பேட்டிங்கிற்கு கை கொடுத்தது. தென்னாபிரிக்கா இந்திய அணியை விட வலுவாக இருந்த போதும் இறுதியில் தோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் நிச்சயமாக இந்திய அணியில் பௌலிங் யூனிட் தான். பும்ரா, ஹர்திக் பாண்டியா, அர்ஷதிப் சிங் உள்ளிட்டோர் துல்லியமாக பந்து வீசி எதிரணியை திணற வைத்தனர்.
இருந்த போதும் ஹென்றி கிளாஸன், மில்லர், டீ காக் இந்திய ரசிகர்களை இறுதிவரை பதட்டத்திலேயே வைத்திருந்தனர். 15-வது ஓவருக்கு பிறகு தான் இந்திய அணியின் வசம் ஆட்டம் திரும்பியது. அதிலிருந்து தான் கிளைமாக்ஸ் தொடங்கியது.. டேவிட் மில்லரும் கிளாஸனும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை மிரட்டி வந்த நிலையில் 36 பந்துகளுக்கு 54 ரன்கள் என்ற நிலையில் அக்ஷர் பட்டேலின் 15வது ஓவர் துவைத்து எடுக்கப்பட்டது.
கிளாசன் அரைசதம் விளாச 30க்கு 30 என்ற வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்தபோது 16வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அப்போது ரிஷப் பன்ட் காலில் வலி ஏற்பட்டு மைதானத்தில் விழ ஆட்டம் சிறிது நேரம் தாமதமாக தென் ஆப்பிரிக்காவின் கோப்பை கனவு தகர்ந்தது. அசுர ஃபார்மில் இருந்த கிளாஸன் சற்றே சோர்ந்து போனார். இது ரோகித் சர்மாவின் அபார வியூகம் என்றே பார்க்கப்படுகிறது.
அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா வீசிய பதினேழாவது ஓவர் இந்தியாவின் பக்கம் கோப்பையை கொண்டு வந்தது என்றே சொல்லலாம். முதல் பந்தலையே கிளாசின் விக்கெட்டை எடுக்க அந்த ஓவர் மிகச் சிறப்பானதாக இந்தியாவுக்கு அமைந்தது. தொடர்ந்து 18-வது ஓவரை வீசிய பும்ரா அந்த ஓவரில் யான்சென்னை வெளியே துரத்தினார். இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் என்ற இக்கட்டான சூழலில் 19வது ஓவரை வீசிய அர்ஷதீப் சிங் நான்கு ரன்கள் கொடுத்து தென்னாப்பிரிக்காவை ஓரம் கட்டினார்.
கடைசி ஓவரை வீசினார் ஹர்திக் பாண்டியா.. இங்குதான் முழுமையாக ஆட்டம் இந்தியாவுக்கு வந்தது. அந்த பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச பவுண்டரி லைனில் அபாரமான கேட்சை பிடித்து சூரியகுமார் யாதவ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதற்கு பிறகு ரபடா ஒரு ஃபோர் அடித்தாலும் பிறகு இந்தியா ஆப்பிரிக்காவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தி கோப்பையை தனதாக்கியது. ஏழு ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தாங்கள் ஒரு 'சோக்கர்ஸ்' அணி என்பதை நிரூபித்து தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது.
வலுவாக இருந்த தென்னாப்பிரிக்காவை பும்ராவின் 16ஆவது 18வது ஓவர்களும், ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரும், ஹர்ஷதிப் சிங்கின் கடைசி இரண்டு ஓவர்களும், எல்லாவற்றுக்கும் மேலாக சூரியகுமார் யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் உள்ளிட்ட நான்கு காரணங்கள் தான் இந்தியாவின் கோப்பை கனவை வெல்ல டெக்னிக்கலாக உதவியது என்பது மறுக்க முடியாத உண்மை..
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக்












Click it and Unblock the Notifications