Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோஹித்தின் ராஜதந்திரம்.. கோலி இறக்கிய "ப்ரோமான்ஸ்".. இங்கிலாந்தை துவம்சம் செய்ய காரணமான 5 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து நாக் அவுட் ஆவது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தை துவம்சம் செய்ய காரணமாக 5 விஷயங்கள் இருந்தன.

இந்த போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கில் 13 பந்துகள் பிடித்து வெறும் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கோலி இன்னொரு பக்கம் டக் அவுட் ஆனார். பிட்ச் அந்த அளவிற்கு பேட்டிங் செய்ய கஷ்டமாக இருந்தது.

What are the reasons behind Team India win against England World Cup 2023 match?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். இதன் பின் அணியை சரிவில் இருந்து மீட்டு ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். 101 பந்துகள் பிடித்த 87 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ராகுல் 39 ரன்கள் எடுத்தார் .

கடைசி கட்டத்தில் விளாசிய சூரியகுமார் யாதவ் 47 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். இதனால் 180ல் சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணி 229-9 ரன்கள் எடுத்தது.

பவுலிங்: இதையடுத்து பவுலிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் மீது பிரஷர் போட்டது. டேவிட் மாலன் விக்கெட்டை 16 ரன்களுக்கு பும்ரா எடுத்தார். அடுத்த பந்தே ஜோ ரூட் விக்கெட்டை பும்ரா எடுத்தார். பின்னர் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஷமி டக் அவுட்டில் எடுக்க இங்கிலாந்து அணி திணறியது., அடுத்து பிரைஸ்டா விக்கெட்டை 14 ரன்களுக்கு சமி எடுத்தார்., அடுத்த 25 ரன்களுக்கு குட்டி பார்ட்னர் ஷிப் அமைத்த பட்லர் மெயின் அலி.. குல்தீப், சமி பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் குல்தீப், ஜடேஜா மீண்டும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை 98-8 ரன்களுக்கே இழந்து தள்ளாடியது. அதன்பின் தொடர்ந்து பிரஷர் போட்ட இந்திய பவுலர்கள், சமி, பும்ரா விக்கெட் எடுக்க 129 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை சுருட்டி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்.

வெற்றிக்கு காரணம்; இங்கிலாந்தை துவம்சம் செய்ய காரணமாக 5 விஷயங்கள் இருந்தன.

1. இங்கிலாந்தை வீழ்த்த முதல் காரணம் ரோஹித் சர்மாவின் வியூகம். இரண்டாம் பவுலிங் செய்தாலும், பனி காரணமாக பந்து வழுக்கினாலும் ஸ்லோ பிட்சை ரோஹித் சர்மா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவர் ஓவர்களை ரொட்டேட் செய்த விதம், பீல்டிங் நிறுத்திய விதம் சிறப்பாக இருந்தது வெற்றிக்கு முக்கிய காரணம்.

2. கோலியின் ப்ரோ மான்ஸ் மைதானத்தில் இந்த முறை அதிகரித்துள்ளது. முக்கியமாக ரோஹித் - கோலி இடையிலான உறவு புதிய நிலையை அடைந்துள்ளது . மோதல், ஈகோ எதுவும் இல்லாமல் இரண்டு சீனியர்களும் தீவிரமாக ஆலோசனைகளை செய்து முடிவுகளை.எடுக்கின்றனர் அது வெற்றியும் பெறுகிறது. நேற்று பட்லர் விக்கெட் உட்பட இரண்டு விக்கெட்டுகள் விழ முக்கியமான காரணமே இவர்களின் ஆலோசனைதான்.

3. நேற்று சமி விக்கெட் எடுத்தது பலரும் எதிர்பார்த்ததே. பிட்ச் அவருக்கு சாதகமாக இருந்தது. அதே சமயம் குல்தீப் பந்தை அதிகம் சுழற்றியது எதிர்பார்க்காமல் வந்தது. கிட்டத்தட்ட எல்லா பந்திலும் அவர் ஸ்டம்பை குறி வைத்து விக்கெட் எடுத்தார். அவரின் 2 விக்கெட்டும் சர்ப்ரைஸ் விக்கெட்தான்.

4. பாஸ்ட் பவுலிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும்.. இன்னொரு பக்கம் குல்தீப் - ஜடேஜா பிட்ச் எப்படி இருந்தாலும் விக்கெட் எடுத்துவிடுகின்றனர். இரண்டு பேரின் ஸ்பின் பவுலிங்கும் எதிரணிக்கு சவாலாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் பிரேக் கொடுப்பதே இவர்கள்தான்.

5. பார்ட்னர்ஷிப் - இந்திய அணியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைந்து விடுகிறது. ஒன்று ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டரில் பார்ட்னர் ஷிப் அமைகிறது. நேற்று ரோஹித்ஜ் அப்படித்தான் ஆட்டத்தை மாற்றினார். இதுவரை மிடில் ஆர்டருக்கு பின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற குழப்பம் இருந்தது. நேற்று சூர்ய குமார் அந்த குழப்பத்தையும் தீர்த்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+