Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல கோடிகளை ஏமாற்றிய எக்ஸ் மனைவி! தவானுக்கு நேர்ந்த கொடுமை.. விவாகரத்து வழக்கில் கோர்ட் என்ன சொன்னது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அவரது மனைவி ஏஷா தவானிடம் இருந்து நேற்று விவாகரத்து வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு இழைக்கப்பட்ட "கொடுமை" காரணமாக டெல்லி நீதிமன்றம் புதன்கிழமை அவருக்கு விவாகரத்து வழங்கியது.

தவான் மற்றும் ஏஷா முகர்ஜி 2012 இல் திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு 10 வயதில் ஜோராவர் தவான் என்ற மகன் உள்ளார். ஆஷா மற்றும் ஜோராவர் இருவரும் ஆஸ்திரேலிய குடிமக்கள். ஆஷா ஏற்கனவே திருமணமானவர் மற்றும் முதல் கணவருடன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தவான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதில் இருந்தே ஒன்றாக இவர்கள் வாழவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் இவர்கள் விவாகரத்து செய்துள்ளனர். இந்த விவாகரத்து தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில் பல ஷாக்கிங் விஷயங்கள் கூறப்பட்டு உள்ளன. ஆண்களுக்கு விவாகரத்து தொடர்பாக உதவிகளை செய்யும் தீபிகா நாராயண் பரத்வாஜ் இது தொடர்பான விவரங்களை தொகுத்து கொடுத்துள்ளார். அதில், திருமணத்திற்கு பின் ஷிகர் தவானுடன் இந்தியாவுக்குச் செல்வதாக ஷிகரிடம் உறுதியளித்திருந்தாலும், திருமணமான சிறிது நாட்களிலேயே ஆஷா ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.

What happened to Dhawan: Ex wife cheated crores, What did the court say in the divorce case?

பின்னர் அங்கேயே தங்கி உள்ளார். ஷிகர் ஆஷாவிற்கு 8 வருட திருமணத்தில் 13 கோடிகளை மனைவிக்கு அனுப்பி உள்ளார். அவர் தனது மனைவியுடன் தொடர்ந்து 1 வருடம் கூட வாழவில்லை. ஏனெனில் ஆஷா தனது மகள்களை கவனித்துக் கொள்ள விரும்பினார். கிரெடிட் கார்டுகள் செலவு, ஆஷாவின் முதல் கணவரின் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பயணம், ஹோட்டல்கள் போன்றவற்றின் மூலம் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு கோடிக்கணக்கில் இங்கிருந்து தவான் பணம் அனுப்பி உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பிறந்த மகன் ஜோரவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்ததால், ஷிகர் தனது மகனுடன் நீண்ட காலம் வாழவே முடியாது. இவர் இந்திய அணியில் இருந்ததால், ஆஷா இந்தியா வர மறுத்ததால் தனது மகனை தவான் 1 மாதத்திற்கு மேல் சந்திக்கவே முடியவில்லை. ஷிகர் ஆஸ்திரேலியாவில் 3 சொத்துக்களை வாங்கி உள்ளார். அவை ஒன்று இருவரின் பெயரிலும் வாங்கப்பட்டது அல்லது ஆஷாவின் பெயரில் வாங்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் ஷிகர் வாங்கி கொடுத்துள்ளார்.

( ஷாக்கடித்த காவிரி.. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு சிக்கல்? )

ஆஷா தனது வேலையை விட்டு முழுக்க முழுக்க தவான் பணத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்துள்ளார். அவர் இந்தியா வந்து தவானுடன் வாழவும் மறுத்துள்ளார். இங்கிருந்து பணம் கேட்டுள்ளார். முந்தைய திருமணத்திலிருந்து தனது இரண்டு மகள்களுக்காகவும் தவானிடம் பெற்றுள்ளார். தனது முந்தைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதால் அவரிடம் இருந்தும் குழந்தை ஆதரவைப் பெறவதற்கு பணம் தனியாக பெற்று வந்துள்ளார். இன்னொரு பக்கம் தவானிடம் இருந்தும் பணம் பெற்று வந்துள்ளார்.

அவர்களின் வெளிநாட்டு பயணங்கள், கவர்ச்சியான விடுமுறைகள் மற்றும் நாய் பயிற்சிக்கு கூட தவான்தான் பணம் செலுத்தினார். ஆனால் ஒன்றாக வாழ மறுத்துள்ளார் ஆஷா. ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் உரிமைகளையும் ஈஷாவின் பெயருக்கு மாற்ற ஷிகர் மறுத்ததால் அவர்களது திருமணம் முற்றிலுமாக முறிந்தது. மொத்த சொத்தையும் தன் பெயருக்கு ஆஸ்திரேலியாவில் மாற்ற அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

( போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்: வீட்டின் ஒரிஜினல் டாகுமென்ட்டை காணோமாம்! )

ஆஷாவிடம் பணம் இருந்தாலும் கூட பல லட்சங்களை மாதம் மாதம் அனுப்பும்படி மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்தியாவிற்கு வந்து ஒரு மாதமாவது தங்கும்படி கூறியும் கூட தவான் கோரிக்கையை அவர் கேட்கவில்லை. இந்த திருமணத்தின் மூலம் ஆயிஷா மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியா டாலர்களை சம்பாதித்திருந்தாலும், ஷிகர் தவானிடம் இருந்து பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான அவரது கோரிக்கை 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13 கோடி), ஜோராவர்ஸ் கஸ்டடி, ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து சொத்துகளும் தனக்கே வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை எல்லாமே செய்தால் விவாகரத்து செய்வேன் என்று ஆஷா கூறியுள்ளார். இதற்கு தவான் ஏற்றுக்கொண்டு பிரச்னையை முடிக்க முயன்றாலும் கூட ஆஷா அதை மறுத்து வந்துள்ளார். இதையடுத்தே தவான் cruelty கிரவுண்ட் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கு சரியான ஆதாரங்களை காட்டி உள்ளதால் தவானுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது. அதோடு இந்த வழக்கில் பங்கேற்க கூட ஆஷா இந்தியா வரவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+