போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்: வீட்டின் ஒரிஜினல் டாகுமென்ட்டை காணோமாம்!
சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தனது வீட்டின் ஒரிஜினல் ஆவணம் தொலைந்து விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது வீட்டின் ஆவணம் தொலைந்து விட்டதாகத் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். நீலாங்கரையில் இருந்து வீட்டின் அசல் ஆவணங்களை 'ஜெராக்ஸ்' எடுக்க எடுத்துச் சென்றபோது ஆவணங்கள் தொலைந்ததாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 150 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 2004 இல் இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பராகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கியுள்ளார். தினேஷ் கார்த்திக் 2015 இல் ஸ்குவாஷ் விளையாட்டு நட்சத்திரம் தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்தார்.
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், காசினோ டிரைவ் சாலையில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீடு அமைந்துள்ளது. இந்த வீடு விதிகளை மீறி கட்டப்பட்டதாக அந்த பகுதிவாசிகள் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டில் அவரது வீட்டை ஆய்வு செய்து அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வீட்டின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக அவர் புகார் செய்துள்ளார்.
முன்னதாக, பிரபல நடிகர் ராம்கி கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த வீட்டின் அசல் சொத்து ஆவணங்களைக் காணவில்லை என்றும், காணாமல் போன ஆவணங்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் நடிகர் ராம்கி போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications