Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ரோல்! இந்திய அணியின் 8-0 வெற்றிக்கு பின் உள்ள பரமரகசியம்.. இப்படிதான் மேட்ச் வின் பண்றாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு பின் உள்ள மிகப்பெரிய ரகசியம் எது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை நெதர்லாந்து அணியுடன் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறவில்லை. தோல்வியும் அடையவில்லை. ஏனென்றால் அந்த அணியை மட்டுமே இதுவரை உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி எதிர்கொள்ளவில்லை.

மற்ற எல்லா அணிகளையும் இந்திய அணி எதிர்கொண்டு விட்டது. எதிர்கொண்டதோடு இல்லாமல் வரிசையாக வெற்றிகளையும் குவித்து வருகிறது.

What is the secret behind Team Indias continuous victory in the World Cup Cricket?

தொடரும் இந்திய அணியின் வெற்றிகள்: . முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. கடைசியாக இலங்கை, அதன்பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

பரம ரகசியம்: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு பின் உள்ள மிகப்பெரிய ரகசியம் எது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

ரகசியம்: இந்திய அணியில் ஆங்கர் ரோல் சீனியர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. கோலி. - ரோஹித் - கே எல் ராகுல் மூவரில் ஒருவர் கண்டிப்பாக ஆங்கர் ரோல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக ரோஹித் வேகமாக தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார் என்றால் அதன்பின் கோலி மெதுவாக ஆடினாலும் விக்கெட்டை இழக்காமல் கடைசி வரை இருக்க வேண்டும். எதிரே விக்கெட் சென்றாலும் மெதுவாக ஆடி ரன் சேர்க்க வேண்டும்.

( எல்லாம் சரியா இருக்கிறது தான் சந்தேகமா இருக்கு.. இந்தியா மேட்ச் பார்க்கும் போது இதுதான் தோணுது! மீம்)

இந்திய அணியில் இந்த ஆங்கர் ரோல் இத்தனை காலம் மிஸ்ஸானது. அது மீண்டும் திரும்பி வந்துள்ளது. அதனால்தான் எதிரே விக்கெட் விழுந்தாலும் கோலி முடிந்த அளவு நிதானமாகவே ஆடி அணியின் ரன்னை உயர்த்தி வருகிறார்.

இன்னொரு பக்கம் அணியில் ஆங்கர் ரோலில் ஆடும் வீரர்களுடன் ஆடும் வீரர்கள் எப்போது வேகமாக ஆட வேண்டும், அவர்களின் ரோல் என்ன என்பதும் அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக நேற்று தொடக்கத்தில் திணறிய ஷ்ரேயாஸ் ஐயரிடம் பாதி போட்டிக்கு பின் வேகமாக ஆடும்படி இஷான் கிஷான் மூலம் ரோஹித் தகவல் அனுப்பி இருந்தார்.

இது போல அணியில் வீரர்களுக்கு முக்கியமான ரோல் உள்ளது. உதாரணமாக ஷமி அணியில் இருந்தாலும் நியூ பால் பெரும்பாலும் பும்ரா - சிராஜ் ஜோடிக்கே தரப்படுகிறது. அதன்பின் ஷமி உள்ளே வருகிறார். இதுவும் கூட ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரோல்தான்.

கடந்த சீசன்களில் இந்திய அணியில் எந்த வீரர் எங்கே ஆட வேண்டும் என்ற முடிவே கடைசியில்தான் எடுக்கப்படும். எந்த ரோலும் உறுதியாக இருக்காது. ஆனால் இப்போது அப்படி இல்லாமல் எல்லா முடிவும் மமுன்பே எடுக்கப்பட்டு முறையான திட்டத்துடன் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.

வெற்றிக்கு முக்கிய காரணம்: முகமது ஷமி ஷரத்துல் தாக்கூருக்கு மாற்றாக வந்து அணியில் அதிக விக்கெட் எடுக்கும் வீரராக மாறி உள்ளார். இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக ஷமி அணிக்குள் வந்தார். வந்த முதல் மேட்சில் இருந்தே அவர் அதிரடியாக ஆடி வருகிறார்.

நேற்று மேட்சில் 5 விக்கெட், அதற்கு முன் கடந்த மேட்சில் 4 விக்கெட், அதற்கு முந்தைய மேட்சில் 5 விக்கெட் என்று ஷமி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார். இவரை ஏன் உட்கார வைத்தார்கள் என்று பலரும் கேட்கும் அளவிற்கு அவரின் ஆட்டம் உள்ளது,

What is the secret behind Team Indias continuous victory in the World Cup Cricket?

உலகக் கோப்பை போட்டியில் ஷமி ஆடிய INNINGS 14. அவர் எடுத்த விக்கெட் 45. குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் ஷமி முதலிடத்தில் இருக்கிறார். இது போக பும்ரா கண்டிப்பாக எல்லா போட்டியிலும் 2 விக்கெட் எடுக்கிறார் . அவரை தொடர்ந்து சிராஜும் நேற்று போட்டியில் 3 விக்கெட் எடுத்து பார்மிற்கு திரும்பி உள்ளார். இதனால் இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங் டாப்பில் உள்ளது.

ஸ்பின் பவுலிங்: பாஸ்ட் பவுலிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும்.. இன்னொரு பக்கம் குல்தீப் - ஜடேஜா பிட்ச் எப்படி இருந்தாலும் விக்கெட் எடுத்துவிடுகின்றனர். இரண்டு பேரின் ஸ்பின் பவுலிங்கும் எதிரணிக்கு சவாலாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் பிரேக் கொடுப்பதே இவர்கள்தான். இவர்கள் அடிக்கடி இடையில் விக்கெட் எடுப்பதால் இந்தியாவின் மொத்த பவுலிங் யூனிட் அசுரர் பலத்தோடு இருக்கிறது.

அதேபோல் பேட்டிங்கில் ஷ்ரேயாஸ், கில், சூர்யா குமார், ராகுல், ஜடேஜா எல்லோரும் பார்மிற்காய் திரும்பி உள்ளதால் கண்டிப்பாக இந்த சீசன் இந்திய அணி வெற்றிபெறும் என்றே கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+