தனஸ்ரீ வர்மா உடன்..நெருக்கமாக இருந்த அந்த ஆண் நண்பர்! சாஹல் விவாகரத்துக்கு காரணம் யார்? என்ன நடந்தது
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தனஸ்ரீ வர்மா தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படம்தான் சாஹல் - தனஸ்ரீ வர்மா இடையிலான விவாகரத்திற்கு முக்கியமான காரணமாக மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனஸ்ரீ வர்மா குறித்த வதந்திகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நடன இயக்குனர் பிரதிக் உடேகருடன் தனஸ்ரீ இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

படத்தில் இருவரும் ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்து உள்ளனர். இருவரும் இரவு பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளனர். கட்டி அணைத்தபடி இருவரும் புகைப்படம் எடுத்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
பிரதிக் உடேகர் யார்?:
மும்பையைச் சேர்ந்த பிரதிக் உடேகர், டான்ஸ் மாஸ்டர் ஆவார். இவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர்.
சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித் மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பாலிவுட்டின் பல பிரபலங்களுடன் பணிகளை செய்துள்ளார். டிவி சேனல்களில் மிகவும் பிரபலமாக இருக்க கூடியவர். கரண் ஜோஹர் மற்றும் மௌனி ராய் போன்ற நன்கு அறியப்பட்ட நபர்களுக்கு இவர் நெருக்கம்.
அவருடன் சேர்ந்துதான் தனஸ்ரீ வர்மா பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே டான்ஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில்தான் இவர்களுக்கு இடையிலான நெருக்கம் தனஸ்ரீ வர்மா- சாஹல் பிரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.அதன்படி சாஹல் - தனஸ்ரீ இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.
நேற்று சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவகாரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.
இதில் தனஸ்ரீ மீது சில கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ தனது கணவரை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. அவரை தூக்கி சுற்றுவது.. நண்பர்கள் முன் அவமதிப்பது போல பேசுவது என்று தனஸ்ரீ மிக மோசமாக நடந்து கொண்டார்.
தனஸ்ரீ சாஹலை பெரிதாக மதிக்கவில்லை. மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல சாஹல் வசீகரமாக இல்லை என்று தனஸ்ரீ நினைத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனஸ்ரீ - ஷ்ரேயாஸ் ஐயர் இடையே நட்பு நெருக்கமாக இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு ஒரு இளைஞரை தனஸ்ரீ டேட்டிங் செய்து வருவதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ அவரின் கணவர் சாஹல் உடல் இருந்தது எல்லாம் பணத்திற்காக மட்டுமே என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.
இணையத்தில் வைக்கப்படும் இந்த புகார்களுக்கு இதுவரை தனஸ்ரீ தரப்பில் இருந்து பதிலோ மறுப்போ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications