இந்த ஒரு விஷயத்தை காலி பண்ணிட்டா போதும்.. உலகக் கோப்பை நமக்குத்தான்.. இந்தியாவின் பிரம்மாஸ்திரம்
சென்னை: 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஒரு பிரம்மாஸ்திரம் உள்ளது. ஒரு வீரர்.. எதிர்பார்த்ததை விட ஆஸ்திரேலியா அணிக்கு அதிகமாக பிரஷர் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு இந்திய வீரரின் ரோல் மிக அதிக அளவில் முக்கியத்துவம் பெறும்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் ஆடி உள்ளது. வரிசையாக இந்திய அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கொஞ்சம் திணறியபடி ஆடி வென்றது.. ஆனால் அதற்கடுத்த ஆட்டங்களில் இந்தியா தொடர்ச்சியாக எதிரணிக்கு எந்த விதமான வாய்ப்பும் கொடுக்காமல்.. கொஞ்சம் கூட பிரஷர் இல்லாமல் வென்றது.

போரிங் மேட்ச் என்று சொல்லும் அளவிற்கு எல்லாமே ஒன்சைட் வெற்றியாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இந்தியாதான் 9 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. செமி பைனல் ஆட்டம் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. மற்றபடி எல்லா மேட்சிலும் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தியது.
முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. இப்போது அதே ஆஸ்திரேலியாவை இந்திய அணி இன்று பைனலில் எதிர்கொள்ள உள்ளது.
வெற்றிக்கு காரணங்கள்: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நன்றாக ஆட பின்வரும் காரணங்கள் உள்ளன.
1. இந்தியாவில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரோல் உள்ளது. உதாரணமாக ரோஹித் சர்மா வேகமாக ஆட வேண்டும் என்பதே ரோல். அவர் 120- 140 ஸ்டிரைக் ரேட்டில் ஆட வேண்டும். 10 ஓவர்களில் 90-100 ரன்களை அடிக்க வேண்டும் என்பதே திட்டம்.
2. கோலி, கில் மெதுவாக ஆட வேண்டும். விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேட்டிங்கில் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு பேருமே சதம் அடிக்க முயல வேண்டும் என்பதுதான் அடுத்த ரோல்.
3. பும்ரா விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ரன் செல்ல விடாமல் பிரஷர் போட வேண்டும்.
4. புதிய பந்தில் சிராஜ் பிரஷர் போட வேண்டும். ரன் போனாலும் விக்கெட் எடுக்க வேண்டும்.
5. ஷமி மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். மிடில் ஓவர்களில் பந்து பழசானதும் அவர் வந்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இப்படி இந்திய அணியில் பலருக்கும் பல பொறுப்புகள் உள்ளன.
ஒரு சூட்சமம்: இதில் ஒரு வீரர்தான் ஆஸ்திரேலியா அணிக்கு பிரஷர் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு இந்திய வீரரின் ரோல் முக்கியத்துவம் பெறும். அவர் ஷ்ரேயாஸ் ஐயர்.
இந்திய அணியில் அவரை ஸ்பின் பவுலிங்கில் ஆட வேண்டும் என்பதற்காகவே சாப்பாடு போட்டு வளர்க்கிறார்கள். ஷ்ரேயாஸ் ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆட கூடிய வீரர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்பின் பவுலிங் பலமாக இல்லை. ஆஸம் சாம்பா, மேக்ஸ்வெல் எல்லாம் பெரிதாக பார்மில் இல்லை.
இவர்களை ஷ்ரேயாஸ் எளிதாக எதிர்கொள்ள முடியும் . ஸ்பின் ஓவர்களை செட்டில் ஆக விடாமல் தடுப்பதன் மூலம் மிடில் ஓவர்களில் இந்தியா அதிரடி காட்ட முடியும். முதல் போட்டியில் கேஎல் ராகுல் செய்ததை இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இவர் கண்டிப்பாக இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக மாறுவார்!












Click it and Unblock the Notifications