உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை! தவறான எண்டில் வந்த அஸ்வின்! பிளைட் செய்த குல்தீப்! அடுத்து திடுக்
சென்னை: உலகக் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடக்காத விஷயம் ஒன்று இன்று இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் நடந்து உள்ளது.
இந்தியாவில் உலகக் கோப்பை 2023 ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. விறுவிறுப்பாக செல்லும் தொடரில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மேட்ச் நடந்து வருகிறது. இதில் இந்தியா டாஸ் வென்ற நிலையில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
சென்னையில் மிதமான வானிலை நிலவி வருகிறது. மழை பெய்யும் வாய்ப்பு இல்லை என்றாலும் மேகமூட்டமாக காணப்படுகிறது. இதனால் இன்று ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. டெங்கு காரணமாக இன்று நடக்கும் போட்டியில் சுப்மான் கில் ஆடவில்லை.
இன்று ஆடும் அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன் ), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

அதிசய சம்பவம்: இந்த நிலையில்தான் உலகக் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடக்காத விஷயம் ஒன்று இன்று இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் நடந்து உள்ளது. அதன்படி இன்று 2.2 ஓவரிலேயே மிட்சல் மார்ஷ் டக் டவுட் ஆனார். உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய ஓப்பனிங்கில் ஒருவர் இந்தியாவிற்கு எதிராக டக் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும்.இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை இப்படி நடந்து உள்ளது.
( ஷாக்கடித்த காவிரி.. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு சிக்கல்? )
அஸ்வின் எண்ட்: இன்று நடக்கும் போட்டியில் இதுவரை அஸ்வின் விக்கெட் எடுக்கவில்லை. 24 ஒவர்கள் வரை அஸ்வின் விக்கெட் எடுக்கவில்லை. இதற்கு காரணம் அவர் தப்பான எண்டில் பவுலிங் செய்ததே. அவர் வந்த அந்த எண்டில் விக்கெட் எடுக்க வாய்ப்பு குறைவு. முக்கியமாக பிட்ச் அதிகமாக அங்கே டர்ன் ஆகவில்லை. இன்னொரு பக்கம் குல்தீப் வந்த எண்டில் விக்கெட் எடுக்க சாதகமான சூழ்நிலை இருந்தது. பிட்ச் ஸ்லோவாக இருந்தது.

இதை பயன்படுத்தி குல்தீப் பந்தை பிளைட் செய்து மேலே வரும்படி போட்டார். ஆனால் அஸ்வினுக்கு பிட்ச் சாதகமாக இல்லை என்றாலும்.. விக்கெட் எடுக்கவில்லை என்றாலும்.. ரன் கொடுக்காமல் பிரஷர் கொடுத்தார். இன்னொரு பக்கம் குல்தீப் சாதகமான பிட்சை பயன்படுத்திக்கொண்டு வார்னர் விக்கெட்டை எடுத்தார். எங்கே வார்னர் - ஸ்மித் டீம் போட்டு இந்தியாவிற்கு பிரஷர் கொடுப்பார்களா என்ற அச்சம் இருந்த போது 41 ரன்கள் இருந்த நிலையில் அவரின் விக்கெட்டை எடுத்தார்.
திக்திக்: ஆனால் பிட்சில் இப்போதும் ஸ்மித் இருக்கிறார். அதேபோல் லபுசேன் இருக்கிறார். அந்த அணியில் 9வது ஆள் வரை பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர்கள். இதுவரை 25 ஓவரில் 101க்கு 2 விக்கெட் விழுந்துள்ளது. இந்திய அணி தொடக்கத்திலேயே மேலும் விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications