கோலி ரசிகரா இருக்கலாம்.. ஆனா இப்படியா? நடுவரை கிழித்து எடுத்த கிரிக்கெட் விமர்சகர்.. ஐசிசி ஆக்சன்?
சென்னை; நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கோலி பேட்டிங் செய்த போது வங்கதேச பவுலர் நஸூம் வீசிய பணத்திற்கு வைடு கொடுக்கப்படாதது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்த போட்டியில் நேற்று 92 ரன்கள் இருந்த போது நஸூம் வைட் பந்து வீசினார். அவரை சதம் அடிக்க விடக்கூடாது என்பதற்காக வைட் பந்து வீசினார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. விராட் கோலி கூட கோபமாக நாஸூமை பார்த்தார்.
நேற்று விராட் கோலி 74 ரன்கள் இருந்த போது இந்தியா வெற்றிபெற 26 ரன்கள் தேவைப்பட்டது. கோலி எல்லா பந்துகளை எதிர்கொண்டு ரன் அடித்து சரியாக 103 ரன்கள் எடுத்தார். நேற்று அப்படிப்பட்ட நிலையில்தான் நஸூம் வைட் பந்தை வீசினார்., ஆனால் நடுவர் கெட்டில்பெர்க் இந்த பந்திற்கு வைட் கொடுக்கவில்லை.

அப்படியே முறைத்து பார்த்துவிட்டு அவர் வைட் கொடுக்காமல் சென்றுவிட்டார். ஆனால் அந்த பந்தில் வைட் கொடுத்து இருந்தாலும் கோலி ரன் எடுத்து இருப்பார். அவர் எப்படி இருந்தாலும் கடைசியில் சதம் அடித்த போது சிக்ஸ் அடித்தார். அதனால் இங்கே வைட் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதனால் கோலிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.
நடுவர் மீது விமர்சனம்: ஆனாலும் நடுவர் கெட்டில்பெர்க் மீது பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். கிரிக்கெட் விமர்சகர் சுமந்த சி ராமன் கூட இதை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதில், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். ஆனால் உலகக் கோப்பை போட்டியில் நடுவராக இருப்பவர் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று தெளிவான வைட் கொடுக்காதது தவறு. ஐசிசி நடுவருக்கு எதிராக செயல்பட வேண்டும்.
நாளை மற்றொரு நடுவர் வேறு ஒரு வீரர் முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு ஒருவருக்கு அவுட் கொடுக்க மறுக்கலாம். நடுவர்கள் விதிகளை அமல்படுத்த வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருப்பினும் நல்ல நோக்கத்துடன் அவர்களின் முடிவெடுப்பதில் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் வேண்டும் என்று விமர்சனம் வைத்துள்ளார்.
( இதுதான் சூட்சமம்.. இந்திய அணியின் வெற்றிக்கு பின் உள்ள பெரிய சீக்ரெட் இதுதான்.. கவனிச்சீங்களா?)
வெற்றி: வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் நிதானமாக ஆடி கொஞ்சம் கொஞ்சமாக பார்ட்னர்ஷிப் அமைத்தது.. விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக நிதானமாக வங்கதேசம் அணி ஆடிக்கொண்டு இருந்தது
தொடக்கவீரர் டான்சிம் ஹாசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் விக்கெட்டும் போன பின் வங்கதேசத்தின் மிடில் ஆர்டர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் முஸ்பிக்கர் ரஹீம் 38, முகமதுல்லா 46 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் வங்கதேசம் அணி 256 ரன்கள் எடுத்தது,

பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப், ஷரத்துல் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் தொடக்கத்தில் இருந்தே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினார்கள். ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையை பொழிந்தார். 40 பந்தில் ரோஹித் சர்மா 2 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 48 ரன்கள் எடுத்தார். அதேபோல் 55 பந்தில் கில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று 53 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த கோலி.. கடைசி பந்து வரை சென்று சிக்ஸ் அடித்து சதம் அடித்தார்., இதனால் இந்தியா எளிதாக நேற்று வென்றது.












Click it and Unblock the Notifications