இதுதான் சூட்சமம்.. இந்திய அணியின் வெற்றிக்கு பின் உள்ள பெரிய சீக்ரெட் இதுதான்.. கவனிச்சீங்களா?
சென்னை: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு சிறப்பான பேட்டிங் தாண்டி வேறு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் 2023ம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. தொடரின் தொடக்கத்தில் இருந்தே இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றது. இதையடுத்து கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்தியா அதிரடியாக வென்றது.
தொடர் வெற்றி: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட் ஆனது. இதன் பின் இறங்கிய இந்திய அணி கோலியின் 85 மற்றும் கே எல் ராகுலின் 97 ரன்கள் காரணமாக இந்தியா வென்றது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றது.272-8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிந்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131, இஷான் 47, கோலி 55 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றிபெற்றது. சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின் ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஆட்டம் காரணமாக இந்தியா எளிதாக வென்றது.
( கவனிச்சீங்களா! பாகிஸ்தானை துவம்சம் பண்ணதை விடுங்க.. இந்திய அணிக்கு கிடைத்த 4 வேற குட் நியூஸ்.. செம )
வெற்றிக்கு காரணம்: இந்தியா இப்படி தொடர் வெற்றிகளை பெற பேட்டிங் முக்கிய காரணம். முக்கியமாக டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் நன்றாக ஆடுகிறது. பேட்டிங்கின் டெயில் ஆர்டர் நன்றாக ஆட வேண்டும். அவர்கள்தான் அணியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. அது ஒரு வகையில் வெற்றிக்கு காரணம். ஆனாலும் இந்திய அணியின் வெற்றிக்கு வேறு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. இதை பிரபல கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் கூட குறிப்பிட்டு உள்ளார்.

அவர், இந்த 2023 உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஏன் இதுவரை ஆதிக்கம் செலுத்துகிறது?
பேட்டிங் நன்றாக இருந்தது ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வது பந்து வீச்சாளர்கள் தான். சென்னையில் ஆஸ்திரேலியா எடுக்க வேண்டிய ரன்களை விட 75 ரன்கள் குறைவாக எடுத்தது. டெல்லியில் ஆப்கானிஸ்தான் எடுக்க வேண்டிய ரன்களை விட 100 ரன்கள் குறைவாக எடுத்தது. அகமதாபாத்தில் பாகிஸ்தான் எடுக்க வேண்டிய ரன்களை விட 100 ரன்கள் குறைவாக எடுத்தது.
இதற்கு காரணம் நல்ல பவுலிங்தான். இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளதே அணியின் வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார். அவர் சொன்னபடியே.. இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் சிறப்பாக உள்ளது. குல்தீப் அதி சிறந்த பார்மில் இருக்கிறார். ஜடேஜாவும் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். ஸ்பின் மட்டுமின்றி பாஸ்ட் பவுலிங்கில் பும்ராதான் அணியை வழிநடத்துகிறார். இது போக ஹர்திக், சிராஜ் இருவருமே கடந்த இரண்டு போட்டிகளாக நன்றாக விக்கெட் எடுத்து வருகின்றனர். இதுவே இந்திய அணியின் வெற்றி பாதைக்கு காரணமாக மாறி உள்ளது .












Click it and Unblock the Notifications