கெட்டில்பெர்க்கை பார்த்ததுமே தெரிஞ்சது! 2 ரன்னுக்கு 3 விக்கெட்! இந்தியாவை விடாது துரத்திய கெட்ட ராசி
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியதில் முதல் 3 விக்கெட்டுகளை இந்தியா 2 ரன்களுக்கு இழந்தது. இந்த விக்கெட் இழப்பிற்கு பின் முக்கியமாக நபர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
இன்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆகி உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஜடேஜாதான் இன்று ஆட்டத்தை மாற்றினார். இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.இந்த தரமான பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

இந்தியா பேட்டிங்: டாஸ் வென்று பவுலிங் செய்த பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி வரிசையாக 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. இஷான் கிஷன், ரோஹித் சர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். அதன்பின் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும் டக் அவுட் ஆனார். ஸ்டார்க் ஒரு விக்கெட், ஹேசல்வுட் இரண்டு விக்கெட் எடுத்து இந்தியாவிற்கு பிரஷர் கொடுத்தனர். இதையடுத்து கோலி, கே எல் ராகுல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி அடித்து பொறுப்பாக ஆடி வருகின்றனர்.
( சிரிச்சதுதான் கஷ்டமா இருக்கு! ஏ ஏய்! ஒரு நிமிடம் அப்படியே எழுந்து நின்ற இஷான் கிஷன்! அலற விட்ட கோலி)
. இந்த விக்கெட் இழப்பிற்கு பின் முக்கியமாக நபர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். அவர் இந்த போட்டியில் நடுவராக வரும் ரீச்சர்ட் கெட்டில்பெர்க். இவர் முன்பு அம்பயராக வந்த போதுதான் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது. அப்போதும் வெறும் 2 ரன்னுக்கு இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது .

அதேபோல் இன்றும் நடந்து உள்ளது . ரீச்சர்ட் கெட்டில்பெர்க் நடுவராக இருந்த போதெல்லாம் இந்தியா வீழ்ந்து உள்ளது. ரிச்சர்ட் கெட்டில்பரோ - இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கெட்ட கனவாக மாறி உள்ளார். இதற்கு முன் இவர் நடுவராக இருந்த போது பின்வரும் போட்டிகளை இந்தியா இழந்தது.
( ஆஸ்திரேலியா செய்த "சின்ன" தவறு.. கப்பென பிடித்துக்கொண்ட இந்தியா.. சரசரவென விக்கெட் விழுந்தது எப்படி?)
• 2015 WC அரையிறுதி.
• 2016 WC அரையிறுதி.
• 2017 CT இறுதிப் போட்டிகள்.
• 2019 அரையிறுதி.
• 2021 PAKக்கு எதிராக.
• 2023 WTC இறுதிப் போட்டிகள்.
• 2023 WC (இன்று).

இவரை வைத்து நெட்டிசன்கள் பலரும் கூட இப்போது மீம்ஸ் போட்டு வருகின்றனர். அவர்தான் இந்திய அணிக்கு பெரிய கெட்ட சகுனம். அவர் வரும் மேட்ச் எல்லாம் இப்படித்தான் நடக்கிறது என்று மீதம் போட்டு வருகின்றனர்.

இன்று ஆடும் அணியில், ரோஹித் சர்மா (கேப்டன் ), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன் ), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications