உலகக் கோப்பை முடிஞ்ச கையோடு.. இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா டிராவிட்.. எல்லாம் காசுதான்? போச்சு
சென்னை: 2023 உலகக் கோப்பை முடிந்த நிலையில் இந்திய அணிக்குள் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. முக்கியமாக அணியின் டாப் பிரிவில் பல்வேறு மாற்றங்கள் நடக்கின்றன.
2023 உலகக் கோப்பை முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் முறையாக டி20 அணியை வழிநடத்த உள்ள சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சிலரைத் தவிர உலகக் கோப்பை அணியில் மற்ற பெரும்பாலானோர் ஓய்வில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய். , அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் (கடைசி இரண்டு போட்டிகளில்) ஆடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அணியில் முக்கிய மாற்றம்; உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக இந்திய அணியின் பயிற்சியாளராக தற்காலிகமாக விவிஎஸ் லட்சுமணன் சேர்க்கப்பட்டு உள்ளார். ஏ அணியின் பயிற்சியாளர் சீனியர் அணிக்கு பயிற்சியாளர் ஆகி உள்ளார்.

ஆனால் விவிஎஸ் லட்சுமணன் நீண்ட கால பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் ராகுல் டிராவிட்டிற்கு பயிற்சியாளர் ஆக தொடரும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் இதோடு இல்லாமல் வேறு முக்கியமான முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
( எல்லாம் ஓவர்.. உலகக் கோப்பை முடிஞ்சதும் கோலி, ரோஹித்திற்கு பிசிசிஐ அனுப்பிய மெசேஜ்.. அவ்வளவுதானா?)
அதன்படி ராகுல் டிராவிட் ஐபிஎல் அணிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். இரண்டு ஐபிஎல் அணிகளுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறாராம். ஒரு அணிக்கு பயிற்சியாளர் ஆகும் திட்டத்தில் உள்ளாராம். பெரும்பாலும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இவர் பயிற்சியாளர் ஆகும் திட்டத்தில் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் டிராவிட் முடிவு: ராகுல் டிராவிட் இதனால் அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் பயிற்சியாளராக இருந்தால் வருடம் முழுக்க உழைக்க வேண்டும். வீட்டுடன் இருக்க முடியாது. கடுமையான பிரஷரும் இருக்கும்.

ஆனால் டி 20 ஐபிஎல் அணியில் இரண்டு மாதம் மட்டுமே வேலைகள் இருக்கும். அதோடு இல்லாமல் ஐபிஎல் வருமானம் மிக அதிகம். இந்திய அணிக்கு கொடுக்கப்படும் வருமானத்தை விட கூடுதல் வருமானம் இவருக்கு கிடைக்கும். இதனால் ராகுல் டிராவிட் இதனால் அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்படி ராகுல் டிராவிட் ஐபிஎல் அணிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். இரண்டு ஐபிஎல் அணிகளுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறாராம். இதனால் பெரும்பாலும் லட்சுமணன் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. நிரந்தரமாக் இந்திய அணியின் பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முறையாக ஆலோசனைகள், தேர்வுக்கூட்டம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications