எல்லாம் ஓவர்.. உலகக் கோப்பை முடிஞ்சதும் கோலி, ரோஹித்திற்கு பிசிசிஐ அனுப்பிய மெசேஜ்.. அவ்வளவுதானா?
சென்னை: 2023 உலகக் கோப்பை முடிந்த நிலையில் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை பிசிசிஐ அனுப்பி உள்ளதாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியாவின் சிறப்பான உலகக் கோப்பை டீம்.. ஒருநாள் அணிகளிலேயே சிறப்பான டீம் என்று எல்லாம் இந்தியாவின் இந்த அணி பாராட்டப்பட்டது.

ஆனாலும் பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நாக் அவுட் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவிடம் வேறு விதமான ஆக்ரோஷ பலம் இருக்கும். இதை எதிர்கொள்ள முடியாமல் நேற்று ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களை 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடியும் கூட தோல்வி அடைந்துள்ளது.
தொடக்கத்தில் இருந்து எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடி 10 போட்டிகளை இந்தியா வென்றது. இந்தியா தோல்வி; ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
டி 20 தொடர்: இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் முறையாக டி20 அணியை வழிநடத்த உள்ள சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சிலரைத் தவிர உலகக் கோப்பை அணியில் மற்ற பெரும்பாலானோர் ஓய்வில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய். , அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் (கடைசி இரண்டு போட்டிகளில்) ஆடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெசேஜ்; இந்த நிலையில்தான் 2023 உலகக் கோப்பை முடிந்த நிலையில் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை பிசிசிஐ அனுப்பி உள்ளதாம். அதன்படி இவர்கள் இருவரையும் இனி டி 20 அணியில் எடுக்க வாய்ப்பு குறைவு. இவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அணியில் எடுக்க வாய்ப்பு உள்ளதாம்.
பிசிசிஐ அனுப்பிய மெசேஜில்.. நீங்கள் டி 20 அணியில் ஆட விரும்பினால் ஆடலாம். ஆட வேண்டாம் என்றாலும் ஆட வேண்டாம். அது உங்கள் விருப்பம்தான். அணியில் இருப்பதும். இல்லாமல் போவதும் உங்களுடைய விருப்பம்தான். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். உங்கள் முடிவை.. இந்திய அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து முடிவெடுங்கள் என்று பிசிசிஐ மெசேஜ் அனுப்பி உள்ளதாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications