கோலி செய்த பெரிய தப்பு.. ஸ்மார்ட்டாக தவிர்த்து.. சுதாரித்த ரோஹித்.. அணியில் பெரிய மாற்றம்.. பின்னணி
சென்னை: கோலி செய்த பெரிய தவறு ஒன்று ரோஹித் சர்மா திருத்திக்கொண்டு உள்ளார். அதுவே இந்திய அணிக்கும் சாதகமாக திரும்பி உள்ளது.
2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் வரை சென்றது. செமி பைனலில் சென்று இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்தது.

அந்த சீசனில் வரிசையாக போட்டிகளில் வென்றும் கூட இந்தியா செமி பைனலில் தோல்வி அடைய காரணம் கோலி - சாஸ்திரி செய்த ஒரு தவறுதான். அது பிளேயிங் லெவனில் சொதப்பியது.
பிளேயிங் லெவன்: கோலி தொடர்ந்து அணியில் மாற்றங்களை செய்து கொண்டு இருந்தார். கேப்டனாக இருந்த கோலி இந்திய அணியின் மிடில் ஆர்டரில் யாரை இறக்குவது என்று தெரியாமல் குழம்பினார். பார்மில் இருந்த சஞ்சு சாம்சன் எடுக்கப்படவில்லை.
அதேபோல் பார்மில் இருந்த அம்பதி ராயுடு அணியில் எடுக்கப்படவில்லை. பண்ட் எடுக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா பவுலிங் போடும் நிலையில் இல்லை. இப்படி இருக்கும் போதுதான் அணியில் விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். அவரின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாக இருந்தது.
அவரும் காயம் காரணமாக வெளியேற பண்ட் அணிக்குள் வந்தார். ஆனால் அவரும் கூட பெரிதாக ஆடவில்லை. கேதார், தினேஷ் கார்த்திக் அணியில் ஏன் இருந்தனர் என்பதே தெரியவில்லை. இதனால் அடிக்கடி அணியின் பிளேயிங் லெவன் மாற்றப்பட்டது. அணியில் மாற்றங்கள் நடந்து கொண்டே இருந்தது.
இது அணியின் காம்பினேஷனை பாதித்தது. பவுலிங்கில் கூட யாரை இறக்குவது யாரை சேர்ப்பது என்ற குழப்பம் இருந்தது. மிடில் ஆர்டர் கடைசி வரை செட்டாகாமல் இருந்தது. டாப் ஆர்டர் காலி ஆனால் மிடில் ஆர்டரும் காலி ஆகும் என்ற நிலைதான் இருந்தது. டாப் ஆர்டர் தோல்வி அடைந்தால் இந்திய அணி தோல்வி அடையும் என்றே கருதப்பட்டது.
அதுதான் செமி பைனல் போட்டியிலும் நடந்தது. நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.,
ரோஹித்: ஆனால் அப்போது கோலி செய்த அந்த தவறை இன்று ரோஹித் சர்மா திருத்திக்கொண்டு உள்ளார். அதுவே இந்திய அணிக்கும் சாதகமாக திரும்பி உள்ளது. அணியில் இரண்டு முறை மட்டுமே அவர் மாற்றம் செய்தார். அதுவும் கட்டாயத்தின் பெயரில் செய்த மாற்றம்.
ஒன்று கில் டெங்கு சரியாகி மீண்டு வந்ததும் இஷான் கிஷன் நீக்கப்பட்டார். இன்னொன்று ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தது.. பேட்டிங்கிற்கு சூர்ய குமார் யாதவ் கொண்டு வரப்பட்டு பவுலிங்கிற்கு ஷரத்துல் நீக்கப்பட்டு ஷமி சேர்க்கப்பட்டார். இது போக முதல் போட்டியில் மட்டும் சென்னை பிட்ச் என்பதால் அஸ்வின் பயன்படுத்தப்பட்டார்.

இதை தவிர அணியில் ரோஹித் என்ற மாற்றமும் செய்யவில்லை. செமி பைனலுக்கு சென்ற பின்பும் பிறருக்கு அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. வின்னிங் காம்பினேஷனை மாற்ற அவர் யோசிக்கவே இல்லை.
அந்த ரிஸ்க்கை எடுக்கவே இல்லை. வெற்றிபெறுகிறோம்.. அப்படியே ஆடுவோம், தேவையின்றி அணியில் மாற்றங்களை செய்ய வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். அணியில் அடிக்கடி மாற்றம் செய்து குழப்பங்களை ஏற்படுத்தாமல் இவர்களுக்கு இதுதான் ரோல் என்பதில் ரோஹித் தெளிவாக இருக்கிறார். முக்கியமாக மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ், ராகுல் ஆகியோருக்கு அவர் வழங்கிய தொடர் ஆதரவுதான் மிடில் ஆர்டரில் இந்தியா பலம் பெற முக்கிய காரணமாக அமைந்தது.
கோலி 2019ல் செய்ததை செய்யாமல் ஒரே அணியுடன் ரோஹித் ஆடுவது 2023ல் அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications